Mpox: குரங்கு அம்மை ஒருவரிடமிருந்து ஒருவருக்கு எப்படி பரவுகிறது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Mpox: குரங்கு அம்மை ஒருவரிடமிருந்து ஒருவருக்கு எப்படி பரவுகிறது தெரியுமா?

உலகளாவிய அளவில் mpox இன் பரவலுக்கு மத்தியில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அறிக்கையானது, கோவிட்-19 போலல்லாமல் mpox வைரஸ் காற்றில் எளிதில் பரவாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

mpox அல்லது monkeypox எனப்படும் குரங்கு அம்மை

குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் Mpox (ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு ஜூனோடிக் வைரஸ்), முக்கியமாக தோலில் இருந்து தோலுக்கு நெருங்கிய தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

இந்த மங்கி பாக்ஸ் நோயானது தொடுதல், உடலுறவு மற்றும் வாயிலிருந்து வாய், அல்லது வாயிலிருந்து தோலுடன் தொடர்புகொள்வது (முத்தம் போன்றவை) உள்ளிட்டவைகள் மூலம் பரவுகிறது. mpox உள்ள ஒருவருடன் நெருக்கமாக இருப்பது, அதாவது ஒருவருக்கொருவர் நெருக்கமாக பேசுவது அல்லது சுவாசிப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

mpox நோய் குறித்த ஆய்வு

CDC's 'Morbidity and Mortality' வாராந்திர அறிக்கையில், 2021-22ல் 221 விமானங்களில் பயணம் செய்த mpox நோயால் பாதிக்கப்பட்ட 113 பேர் மீது இந்த ஆய்வு செய்யப்பட்டது. அதில், பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்த 1,046 பயணிகளில் யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்று முடிவுகள் காட்டுகின்றன.

mpox உள்ள ஒருவருடன் நேருக்கு நேர் தொடர்பின் மூலம் இது எளிதில் பரவக்கூடும் என் WHO கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2022 mpox வெடிப்பின் போது, ​​வைரஸ் முக்கியமாக பாலியல் தொடர்பு மூலம் பரவியதாகவே கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், வெவ்வேறு நிலைமைகளின் போது mpox எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று WHO ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். mpox இன் முக்கிய அறிகுறி தோல் வெடிப்பு ஆகும், இது சீழ் நிறைந்த புண்களாக உருவாகிறது, இது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.

குரங்கு அம்மை எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன?

குரங்கு அம்மை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். நெருக்கமான உடல் தொடர்பு மூலம் இது மனிதர்களிடையே பரவும். இந்த நோய் பாதிப்பு இருந்தால் காய்ச்சல், தசைகளில் வலி, பெரிய கொப்புளங்கள் போன்ற காயம் உள்ளிட்டவை ஏற்படும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தொண்டை புண் மற்றும் இருமல் மற்றும் நிணநீர் அழற்சி ஆகியவையும் மற்ற அறிகுறிகளாகும்.

மங்கி பாக்ஸ் தடுப்பு நடவடிக்கை

மங்கி பாக்ஸ் தடுப்புக்கான மருந்தை டென்மார்க்கின் பவேரியன் நோர்டிக் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் 2 டோஸ் குரங்கு அம்மை பாதிப்பை 85%- 90% வரை தடுக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவை பொறுத்தவரை சீரம் நிறுவனம் இதற்கான வேக்சினை தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது.

Image Source: FreePik

Read Next

வாழைப்பழம் சாப்பிடுவது பல்லுக்கு நல்லதா? கெட்டதா?

Disclaimer

குறிச்சொற்கள்