Exercises for erectile dysfunction: விறைப்புத்தன்மையின்மை (ED) என்பது உடலுறவுக்கு தேவையான உறுதியை சீர்குலைக்கும். அவ்வப்போது விறைப்புத்தன்மையின்மை பிரச்சனை இருப்பது கவலைக்குரிய ஒரு காரணம் அல்ல. இருப்பினும், இது தொடர்ந்தால், மன அழுத்தத்தை ஏற்படுத்தும், உங்கள் தன்னம்பிக்கையை பாதிக்கும் மற்றும் உறவு சிக்கல்களுக்கு பங்களிக்கும்.
சென்னையில் உள்ள சிறந்த பாலியல் நிபுணர்களில் ஒருவரான டாக்டர் கார்த்திக் குணசேகரன், விறைப்புத்தன்மையின்மை என்றால் என்ன..? இதற்கு உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது..? விறைப்புத்தன்மை குறைந்தால் எதை செய்யக்கூடாது.? என்பதற்கான விளக்கத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதை அறிய இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
விறைப்புத்தன்மையின்மை என்றால் என்ன? (what is Erectile Dysfunction)
விறைப்புத்தன்மையின்மை (ED) என்பது ஒரு வகை ஆண்குறி கோளாறு ஆகும். உடலுறவுக்கான போதுமான விறைப்புத்தன்மையைப் பெறுவதற்கும் பராமரிப்பதற்கும் உங்கள் திறனை இது பாதிக்கிறது. விறைப்புத்தன்மையைப் பெறுவதற்கும் பராமரிப்பதற்கும் உங்கள் உணர்வுகள் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
நிதானமாகவும், நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் இருப்பது அவசியம். ஆனால் சில நேரங்களி விறைப்புத்தன்மையின்மை ஏற்படுவது இயல்பானது. நீங்கள் பதட்டமாக, கவலையாக, விரக்தியாக அல்லது சோர்வாக உணர்ந்தால் விறைப்புத்தன்மையின்மை ஏற்படலாம்.
விறைப்புத்தன்மையைப் பெறுவதில் அல்லது பராமரிப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், மேலும் கலந்துரையாடலுக்கு ஒரு சுகாதார வழங்குநருடன் சந்திப்பைத் திட்டமிடுவது நல்லது.
மேலும் படிக்க: Sex During Periods: மாதவிடாய் காலத்தில் ஆணுறையுடன் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா.?
விறைப்புத்தன்மை குறைபாட்டின் அறிகுறிகள் (Erectile Dysfunction Symptoms)
* உடலுறவுக்கு முன் சில நேரங்களில் மட்டுமே விறைப்புத்தன்மை பெற முடியும்.
* உடலுறவுக்கு முன் விறைப்புத்தன்மையை பெற முடியும், ஆனால் உடலுறவின் போது அதை பராமரிக்க முடியாது.
* விறைப்புத்தன்மை பெற முழுமையான இயலாமை.
* விறைப்புத்தன்மையை பராமரிக்க நிறைய தூண்டுதல் தேவைப்படுகிறது.
விறைப்புத்தன்மை குறைபாடை போக்க உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது.? (How does exercise help erectile dysfunction)
விறைப்புத்தன்மையின்மை (ED) பிரச்னையை போக்க உடற்பயிற்சி உங்களுக்கு உதவலாம். அது எப்படி என்று யோசிக்கிறீர்களா.? இதற்கு இரத்த நாலம் தான் காரணம். அதாவது விறைப்புத்தன்மையின்மைக்கு ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால், இரத்த குழாய் சுறுங்குதல். இதனை தடுக்க நடைபயிற்சி உதவும்.
45 நிமிடங்கள் வேகமாக நடைபயிற்சி (Brisk Walking) செய்வது, இரத்த குழாய் பெரிதாகும். குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு. இரத்த குழாய் விரிவடையும் போது, ஆண் உறுப்புக்கு இரத்தம் சென்று, விறைப்புத்தன்மையை பராமரிக்க உதவும் என்று மருத்துவர் கார்த்திக் குணசேகரன் கூறினார்.
மேலும் வேகமாக நடைபயிற்சி (Brisk Walking) செய்வது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்கும். டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்பது பாலியல் ஹார்மோன் ஆகும். இது விறைப்புத்தன்மையை நீண்ட நேரம் வைத்திருக்க உதவும் என்று மருத்துவர் கூறினார்.
விறைப்புத்தன்மை குறைந்தால் இதை செய்யாதீர்கள் (Dont Do This if You Lose Erection)
நீங்கள் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, விறைப்புத்தன்மை குறைந்தால், உங்களால் மீண்டும் உடலுறவில் ஈடுபட முடியாது என்று நினைக்காதீர்கள். அது முற்றிலும் தவறு என்று மருத்துவர் கார்த்திக் கூறுகிறார். ஆண்களு விறைப்புத்தன்மை வருவதும் குறைவதும் சகஜம்.
சிலருக்கு தங்களது துணை முத்தமிட்டாலோ, கட்டிப்பிடித்தாலோ விறைப்புத்தனை ஏற்படும், சிலருக்கு ஓவல் செக்ஸ் செய்யும் போது விறைப்புத்தன்மை ஏற்படும், மேலும் சிலருக்கு தங்களின் துணையை தொட்டாலோ, அல்லது அவர்கள் சீண்டினாலோ விறைப்புத்தனை ஏற்படும்.
ஆனால் உடலுறவில் ஈடுபடும் போது, விறைப்புத்தன்மை குறைந்தால், இனி நம்மால் முடியாது, உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நினைக்க வேண்டும். இது ஏதேனும் வலி அல்லது மற்ற சிந்தனை காரணமாக இருக்கலாம்.
இதற்கான நம்மல் முடியாது என்று நினைத்தால், நீங்கள் எப்போதெல்லாம் உடலுறவில் ஈடுபடுகிறீர்களோ, இது தான் நினைவிற்கு வரும். இதனால் சரியாக உடலுறவு வைத்துக்கொள்ள முடியாது. மேலும் இது மன அழுத்தத்திற்கு உங்களை தள்ளும்.
இதற்கு மாற்றாக, உங்களை விறைப்புத்தன்மையாக வைத்திருக்க என்ன உதவும் என்று சிந்தியுங்கள். நீண்ட நேரம் ஃபோர் பிளே (Foreplay) செய்ய முயற்சிக்கவும். இது உங்களின் விறைப்புத்தன்மையை நீண்ட நேரம் வைத்திருக்கும். மேலும் உடலுறவை சிறக்கச்செய்யும்.
{இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram}
Image Source: Freepik