How To Cure Inner Knee Pain At Home: மோசமான உணவுமுறை, அதிக உடல் எடை, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, வயது அதிகரிப்பு, அதிக நேரம் உட்காருதல், வைட்டமின் குறைபாடு, மூட்டு வலி, கால்சியம் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முழங்கால்களில் உள்ளே வலி ஏற்படலாம். இன்று பலரும் முழங்கால் வலியால் அவதியுறுகின்றனர். இதனால் அவர்களால் தங்களது அன்றாட பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்படலாம். இது ஒரு வகையான கீல்வாதம் என்று குறிப்பிடலாம். இதில் முழங்கால்களின் எலும்புகளுக்கு இடையில் ஒரு இடைவெளி ஏற்படலாம்.
பல சமயங்களில் முழங்காலிலிருந்து வெடிக்கும் சத்தம் வரத் தொடங்கலாம். இதனால் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கிறது. அதிலும் சிலர் முழங்கால் வலியை புறக்கணிக்கிறார்கள். ஆனால் இதை நீண்ட நேரம் தவிர்ப்பது பிரச்சனைகளை அதிகரிக்கலாம். முழங்கால்களில் உள் வலியைக் குறைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து நொய்டாவில் உள்ள வைக் ஜி ஆயுர்வேதிக் கிளினிக்கின் பிஎம்எஸ் MD டாக்டர் அங்கூர் குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Feet Swelling Remedies: கால்கள் அடிக்கடி வீங்கி வலி வருதா? இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க
உள் முழங்கால் வலி குறைய வீட்டு வைத்தியம்
முழங்கால்களில் உட்புற வலியைக் குறைக்க சில வீட்டு வைத்தியங்கள் உதவுகிறது.
பச்சை காய்கறிகளை உட்கொள்ளுதல்
முழங்கால்களில் ஏற்படும் வலியைக் குறைக்க பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகளில் உள்ள புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு வலிமை தருவதுடன், இரத்த சோகை பிரச்சனையை நீக்குகிறது. இதை உட்கொள்வதால் உடல் பலவீனத்தை நீக்கும். பச்சைக் காய்கறிகளில் முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, கடுகு கீரைகள், சுரைக்காய் மற்றும் கீரைகள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
கால்சியம் நிறைந்த உணவுகள்
முழங்கால்களில் ஏற்படும் உள் வலியைக் குறைப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். அந்த வகையில் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற உணவுகளை உட்கொள்வதால் எலும்பு பலவீனத்தை நீக்கலாம். இது மட்டுமின்றி எலும்புகளை வலுவடையச் செய்ய உதவுகிறது.
அத்திப்பழம் மற்றும் மக்கானா சாப்பிடுவது
இவற்றை உட்கொள்வது முழங்கால்களின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. உடல் பலவீனத்தை நீக்க முதலில் 10 முதல் 15 மக்கானாவை ஒரு கிளாஸ் பாலில் கொதிக்க வைத்து தொடர்ந்து சாப்பிடலாம். மேலும் ஒரு அத்திப்பழத்தை 1 கிளாஸ் பாலில் வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு பலத்தைத் தரும். இது முழங்கால் வலியை நீக்கும். மக்கானா மற்றும் அத்திப்பழம் இரண்டிலும் எலும்புகளை வலுப்படுத்த உதவும் கால்சியம் நிறைந்துள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Acid Reflux Reducing Tips: நெஞ்செரிச்சல் டக்குணு சரியாகணுமா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க
நடைபயிற்சி செய்வது
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு காலை மற்றும் மாலை தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்வது அவசியமாகும். நடைபயிற்சி செய்வது முழங்கால்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. இதன் மூலம் வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் தருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம், பல்வேறு நோய்களைத் தடுக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
ஜங்க் ஃபுட் தவிர்ப்பது
உட்புற முழங்கால் வலியைக் குறைக்க ஜங்க் ஃபுட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனிகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதுடன் உட்புற முழங்கால் வலி பிரச்சனையை அதிகரிக்கலாம். எனவே முழங்கால் வலி பிரச்சனையைக் குறைக்க நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
முழங்கால்களின் உள் வலியைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனினும் ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருப்பின், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு பின்பற்றுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Constipation Remedies: மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க இந்த இரண்டு பொருள் போதும்
Image Source: Freepik