Relation ship Commitment: கணவன் - மனைவிக்கு கட்டாயம் இருக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்!

  • SHARE
  • FOLLOW
Relation ship Commitment: கணவன் - மனைவிக்கு கட்டாயம் இருக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்!


“திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்” என பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். ஏனெனில் கணவன் - மனைவி பந்தம் என்பது அந்த அளவிற்கு பிணைப்புடன் இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

உறவுகளை வலுப்படுத்த புரிதல் மிகவும் முக்கியமானது. கணவனுக்கு மனைவி அளிக்கும் அதே முக்கியத்துவத்தை கணவன் மனைவிக்கும் அளிக்கும் வேண்டும். அப்படி உறவை வலுப்படுத்த உதவும் 6 முக்கிய பொறுப்புகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்…

heres-what-you-need-to-know-about-6-types-of-commitment-in-relationship

இதையும் படிங்க: Coconut Oil Benefits: தேங்காய் எண்ணெயின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!

1.உணர்ச்சிபூர்வமான அர்ப்பணிப்பு:

உணர்ச்சிபூர்வமான அர்ப்பணிப்பு என்பது உங்கள் துணையுடன் இருப்பது மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவது. அவர்கள் சொல்வதைக் கேட்பது, அவர்களின் தேவைகளைப் பற்றி உணர்வது மற்றும் சவாலான காலங்களில் சாய்வதற்கு தோள் கொடுப்பதாகும்.

2.கம்யூனிகேஷன்:

கணவன் - மனைவிக்குள் வெளிப்படையான நேர்மறையான, மரியாதையான உரையாடல் அவசியம். பார்டனர்கள் தங்களுக்குள் தோன்றும் எண்ணங்கள், கவலைகள், ஆசைகளை விவாதிக்க முழு மனதோடு தயாராக இருக்க வேண்டும். சில சமயங்களில் விவாதங்கள் தர்மசங்கடமாக இருந்தாலும், மனம் திறந்து பேசுவது மட்டுமே பெரிய பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.

3.நேரம் ஒதுக்குங்கள்:

கணவன் - மனைவிக்குள்ளான உறவை வலுப்படுத்த இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிட வேண்டும். ஒன்றாக ஒருவேளையாவது உணவருந்துவது, இரவு நேரங்களில் அன்றைய தினம் நடந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடுவது, உடற்பயிற்சி செய்வது, வாக்கிங் செல்வது அல்லது பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது என கிடைக்கும் நேரத்தை குவாலிட்டியாக செலவிடுவது உறவை வளர்க்க உதவும்.

இதையும் படிங்க: Bitter Gourd Truth: இப்படி சாப்பிட்டால் ஆபத்து… பாகற்காய் பற்றிய கசப்பான உண்மைகள்!

4.நம்பிக்கை முக்கியம்:

பார்ட்னர்களுக்குள் செயல், சொல் என அனைத்திலும் நம்பிக்கை முக்கியம். கொடுத்தவாக்கை காப்பாற்றுவது, உண்மையாக நடந்து கொள்வது, ஒருவருக்குகொருவர் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவது போன்ற கட்டாயமாகும்.

5.காசு விஷயத்தில் கவனம் தேவை:

உறவுகளை கட்டமைக்க பணம் தேவையில்லை என்றாலும், உறவுகளை சீர்குலைப்பதில் பணம் முக்கிய பங்காற்றுகிறது. நிம்மதியான, சந்தோஷமான உறவிற்கு சேமிப்பு அவசியம். கணவன் மனைவி இருவரும் இணைந்து செலவுகளை நிர்வாகிப்பது, ஒன்றாக இணைந்து முக்கிய முடிவுகளை எடுப்பது, பண விஷயத்தில் வெளிப்படை தன்மையை கையாளுவது ஆகியவை உறவை மேம்படுத்த உதவும்.

6.தனிப்பட்ட அர்ப்பணிப்பு:

கணவன், மனைவி மற்றவரின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் உணர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். நேரமும் முயற்சியும் தேவைப்பட்டாலும், தனிப்பட்ட இலக்குகள் மற்றும் அபிலாஷைகளைத் தொடர ஒருவரையொருவர் ஊக்குவிக்க வேண்டும்.

Image Source: Freepik

Read Next

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்