What Fruits To Eat And Avoid When Pregnant: பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவுப் பழக்க வழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது கட்டாயமான ஒன்றாகும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் பெண்கள் தங்களுடைய உணவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் தாய்மார்கள், குழந்தைகள் இருவரையும் பாதிக்கும். எனவே இந்த காலகட்டத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுப்பொருள்கள், பழங்கள் என பல வகைகள் உள்ளது. இந்த உணவுக்கட்டுப்பாடுகளின் உதவியுடனே தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும். அதன் படி, பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிட மற்றும் சாப்பிடக்கூடாத சில பழங்களைக் காணலாம்.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் சில ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மிக்க பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்களைக் காணலாம்.
மாதுளம்பழம்
மாதுளம்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி6, இரும்பு, ஃபோலேட், புரதம், கால்சியம் , நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க உதவுகிறது. கூடுதலாக மாதுளம்பழத்தில் வைட்டமின் கே உள்ளது. இவை தாயின் இடுப்பு எலும்புகளுக்கும், குழந்தைகளின் எலும்பு வலுவடையவும் உதவுகிறது. மேலும், தாய் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான கொடியை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric Water During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் மஞ்சள் கலந்த நீர் குடிப்பது நல்லதா?
கொய்யாப்பழம்
கர்ப்பக்காலத்தில் மலச்சிக்கல் பொதுவான பிரச்சனையாகும். இதைத் தவிர்க்க கொய்யாப்பழம் உதவுகிறது. கொய்யாபழத்தில் வில் வைட்டமின் சி மற்றும் இ, கரோட்டினாய்டுகள், பாலிஃபினால்கள், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமானக் கோளாறுகளை நீக்க உதவுகிறது. எனவே கர்ப்பகால மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்குவதில் கொய்யாப்பழம் சிறந்த தேர்வாகும்.
தர்பூசணி
இந்த குளிர்ச்சியான பழத்தை பேறுகால முடிவை நெருங்கும் நேரம் தவிர்க்க வேண்டும் என பலரும் கூறுவர். ஆனால் தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை நீர்ச்சத்து நிறைந்த பழமாகும். இது உடலில் கை, கால்களின் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், தசையை தளர வைக்கிறது.
ஆரஞ்சு
இது வைட்டமின் சி நிறைந்த பழமாகும். கர்ப்பக்காலத்தில் ஒவ்வாமை பிரச்சனை இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனையாகும். உடல் பலவீனமாக இருக்கும் கர்ப்பிணி பெண்கள், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு பழத்தை சாப்பிட வேண்டும். இவை கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றைத் தவிர்க்க உதவுகிறது. இதில் உள்ள ஃபோலேட் குழந்தையின் நரம்பு மண்டலம், மூளை, முதுகெலும்பு வளர்ச்சியை சீராக வைக்க உதவுகிறது. இந்த பொட்டாசியம் சத்துக்கள் கர்ப்பக்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
ஆப்பிள்
கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதன் ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பிரச்சனை வராமல் தடுக்க உதவுகிறது. மேலும், ஆப்பிளில் உள்ள வைட்டமின் ஏ, ஈ, டி போன்றவை கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Eat Jamun During Pregnancy: கர்ப்ப காலத்தில் நாவல் பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்குமா?
கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்
கர்ப்பிணி பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சில பழங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
அன்னாச்சிப்பழம்
இதில் அதிக அளவிலான புரதங்கள், வைட்டமின்கள் போன்றவை உள்ளது. எனினும், இந்த பழங்களை கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இதில் ப்ரோமிளின் என்ற என்சைம் உள்ளது. இது கர்ப்பப்பை வாயை பலவீனமாக்கி கருச்சிதைவு ஏற்படுத்த வழிவகுக்கலாம் அல்லது முன்கூட்டியே குழந்தை பிறப்பை ஏற்படுத்தலாம்.
திராட்சை
திராட்சை உட்கொள்ளல் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனினும், இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், ஆர்கானிக் அமிலம், மினரல் சத்துக்கள் போன்றவை அதிகம் காணப்படுகிறது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இரத்த சோகையை குணமாக்கவும் பெரிதும் உதவுகிறது. எனினும், அளவுக்கு அதிகமான திராட்சையை உட்கொள்ளும் போது பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக திராட்சை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
பப்பாளி
கர்ப்பிணி பெண்கள் பழுக்காத பப்பாளி பழம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதே சமயம், பழுத்த பப்பாளி பழம் எடுத்துக் கொள்ளும் போதும் சரியான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை குறைவான அளவில் எடுத்துக் கொள்வது தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கேடு விளைவிப்பதில்லை. ஆனால், பழுக்காத பப்பாளிப்பழத்தில் ஸ்டெக்ஸ் என்ற கூறு நிறைந்துள்ளது. எனவே இதை கர்ப்ப காலத்தில் உட்கொள்வதால், கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தி குழந்தைகளைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
இவை அனைத்தும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிட கூடாத பழங்கள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Avoid Pregnancy Fruits: கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா?
Image Source: Freepik