Doctor Verified

இந்தியாவிலேயே முதன் முறை… சென்னையில் அதிநவீன தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை மையம்!

  • SHARE
  • FOLLOW
இந்தியாவிலேயே முதன் முறை… சென்னையில் அதிநவீன தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை மையம்!

மனிதனுக்கு விளையாட்டு மற்றும் அன்றாட நடைமுறைகளை செயல்படுத்த கைகள் மிக பங்காற்றுகிறது. குறிப்பாக தோள்பட்டையில் அமைந்துள்ள பந்து போன்ற மூட்டு, கைகளை 360 டிகிரிக்கு சுழற்றவும், வேலைகளை செய்யவும் உதவுகிறது. அதேபோல் மணிக்கட்டு மற்றும் முழங்கையில் உள்ள எலும்புகளும் மிக முக்கியமானது. ஆனால் இந்தியாவில் இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை குறித்து மக்களிடையே நன்கு விழிப்புணர்வு உள்ளது.

தோள்பட்டை மற்றும் முழங்கை சம்பந்தமான சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. மருத்துவர்கள் மற்றும் பொது எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சையின் நன்மைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

தற்போது சென்னையில் பிரபல மருத்துவரான ராம் சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள UPPER LIMB UNIT- மருத்துவ மையத்தில், தோள்பட்டையின் எலும்பு, குருத்தெலும்பு அல்லது தசைகள் மோசமாக தேய்ந்து போனாலோ அல்லது கிழிந்தாலோ, உலகத்தரத்தில் அதிநவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி, அதனை மறுகட்டுமானம் செய்யாமல் பாதிக்க மூட்டுகளையே மாற்ற முடியும்.

இதுகுறித்து மருத்துவர் ராம் சிதம்பரம் கூறுகையில், “CHENNAI UPPER LIMB UNIT-யில் தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை ஆகியவற்றின் மூட்டுகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படும். தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை எலும்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகத் தரத்திலான சிகிச்சையை வழங்குவதே எங்களுடைய நோக்கம். தோள் பட்டை மூட்டுகளில் தேய்மானமோ, டிஸ்லோகேஷனோ ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கமானது. ஆனால் எங்களுடைய மையத்தில் மோசமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தோள் பட்டை மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பம் என்னென்ன?

உலகிலேயே முதல் முறையாக தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சையை, ஹோலோலென்ஸ் மற்றும் நேவிகேஷன் சாப்ட்வேரைப் பயன்படுத்தி மிக்ஸ்டு ரியாலிட்டியின் வழிகாட்டுதலுடன் செய்யப்படவுள்ளது.

ஹோலோலென்ஸ் என்பது ஹைடெக் சென்னல் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் ஹாலோகிராபிக் டிஸ்ப்ளே கொண்ட ஒரு ஊடாடக்கூடிய அல்-இயக்கப்பட்ட ஹெட்செட் ஆகும்.

கீல்வாதம் அல்லது தோல்வியுற்ற அறுவை சிகிச்சைப் பிறகு வரும் நோயாளிகளுக்கு முதலில் CT ஸ்கேன் எடுக்கப்பட்டு, க்ளெனாய்டு பெக் மற்றும் ஸ்க்ரூக்களுக்கான சிறந்த இடத்தைத் தேர்வு செய்ய புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் திட்டமிடப்படுகிறது.

3D ஹாலோகிராம் உதவியுடன் அறுவை சிகிச்சை நிபுணர் ஹோலோலென்ஸ் சாதனத்தை அணிந்து வழிச்செலுத்துதல் மற்றும் பிரச்சனை குறித்து அறிய முடியும்.

மேலும் ஹாலோகிராம் எப்படி செயல்படுகிறது என்பதும் உடனுக்குடன் நோயாளிகளுக்கு நேரடியாகக் காண்பிக்கப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை துளையிடுவது, பெக் மற்றும் ஸ்குருகளை பொருத்துவது போன்றவற்றை செய்ய முடியும்.

ஹோலோலென்ஸ் தோள்பட்டை மாற்றத்தில் சாக்கெட் பெக் மற்றும் ஸ்குருகளை துல்லியமாக பொருத்த உதவுகிறது. இந்த அதிநவீன சிகிச்சை எடுத்துக் கொண்ட நோயாளிகள், ஸ்லிங் போஸ்ட்-ஆப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. உடனடியாக தோள்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்குள் கைகளை 90 டிகிரி வரை முன்னோக்கி உயர்த்த முடியும், 3 மாதங்களில் முழுவதுமாக சுதந்திரமாக இயக்கக்கூடிய அளவிற்கு இந்த சிகிச்சை பலனளிக்கக்கூடியது.

என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படும்?

  1. உலகத் தரம் வாய்த்த மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர்கள் குழு மூலம் தோள்பட்டை மற்றும் மேல் மூட்டு பராமரிப்பு சிகிகிச்சை வழங்கப்படும்.
  2. தோள்பட்டை மாற்று-3D திட்டமிடல், ஹோலோலென்ஸ் மற்றும் மிக்ஸ்டு ரியாலிட்டி நேவிகேஷன் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நோயறிதல், திட்டமிடல் மற்றும் தரமான சிகிச்சை வழங்கப்படும்.
  3. விர்ச்சுவல் மற்றும் அல் பிசியோ போன்ற பிரத்யேக பிசியோதெரபி உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய விரிவான மேல் மூட்டு பராமரிப்பை என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

இம்மையத்தின் தலைமை மருத்துவரான ராம் சிதம்பரம் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு மற்றும் கையை பாதிக்கும் 4,500 கீஹோல் அறுவை சிகிச்சைகள், 1,100 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் 3,000 எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். தென்னிந்தியாவில் முதன் முறையாக 2011ம் ஆண்டு தலைகீழ் தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளார்.

Image Source: Freepik

Read Next

சிகரெட்டை நிறுத்த சூப்பர் டிப்ஸ்.!

Disclaimer

குறிச்சொற்கள்