Rose Water Benefits: சரும பராமரிப்பில் ரோஸ் வாட்டர் என்பது பிரதான பங்கு வகிக்கிறது. ரோஸ் வாட்டரை டோனர், மாய்ஸ்சரைசர் மற்றும் ஸ்ப்ரேயாக பயன்படுத்தலாம். சருமத்தை பளபளப்பாக்குவதுடன், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயையும் எளிதாகக் குறைக்கிறது.
ரோஸ் வாட்டர் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள பண்புகள் தோல் வறட்சியடையாமல் பாதுகாக்கிறது. இது நிறத்தை மேம்படுத்துவதோடு, முகத்தையும் பளபளப்பாக்கும்.
இதையும் படிங்க: உங்கள் சருமத்தை இப்படி பராமரித்தால், 30 வயதிற்கு பிறகும் கூட உங்கள் சருமம் இளமையாகவும், பளபளப்புடனும் இருக்கும்
ரோஸ் வாட்டருக்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சிலர் அவரவர் தேவைக்கேற்ப ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ரோஸ் வாட்டரை தடவுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா? வெளியே செல்வதற்கு முன் முகத்தில் ரோஸ் வாட்டர் தடவலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கான பதிலை பார்க்கலாம்.
வெளியே செல்வதற்கு முன் ரோஸ் வாட்டர் அப்ளை செய்யலாமா?

ரோஸ் வாட்டர் சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. வைட்டமின் ஏ, சி, ஈ, பி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் காணப்படுவதால், சருமத்தைப் பாதுகாத்து, சேதமடையாமல் தடுக்கிறது. இது சருமத்தை குளிர்ச்சியாக்கி சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
வெளியே செல்லும் முன் ரோஸ் வாட்டரை முகத்தில் தெளிக்கலாம். மாசுபாட்டினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதோடு, தோல் சேதமடைவதில் இருந்தும் பாதுகாக்கிறது. இது சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யையும் உறிஞ்சுகிறது.
ரோஸ் வாட்டரை எப்போது பயன்படுத்த வேண்டும்?
ரோஸ் வாட்டரை பகலில் எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் அதிலிருந்து அதிக பலன்களைப் பெற, இரவில் தூங்கும் முன் உங்கள் முகத்தில் தடவவும். இப்படி தொடர்ந்து செய்வதால் முகம் பொலிவு பெறுவதுடன், நிறமும் மேம்படும். நமது செல்களும் இரவில் எளிதில் சரிசெய்யப்படும். முகத்தை சுத்தம் செய்து ரோஸ் வாட்டரை தடவவும். இது கருவளையத்தை குறைக்க உதவுவதோடு பருக்களையும் குறைக்கும்.
ரோஸ் வாட்டர் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
- ரோஸ் வாட்டரை முகத்திற்கு தடவினால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கும்.
- ரோஸ் வாட்டர் சருமத்தை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.
- ரோஸ் வாட்டரை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
- ரோஸ் வாட்டர் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கிறது.
- ரோஸ் வாட்டர் சருமத்திற்கு நன்மை பயக்கும். இதை முகத்தில் தடவுவதற்கு முன் பேட்ச் செய்யுங்கள்.
Image Source: FreePik