$
Keeping Phone Near Head Cause Cancer: இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. தினசரி வேலையிலிருந்து மக்களுடன் தொடர்புகொள்வது மற்றும் பொழுதுபோக்கிற்காக, மக்கள் தங்கள் நாளின் பெரும்பகுதியை தொலைபேசியில் செலவிடுகிறார்கள். இன்டர்நெட், மொபைல் போன் உலகில் புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டதால், மக்களின் பணிகளும் போன்கள் மூலமாகவே நடக்கிறது.
ஆனால், உங்கள் வாழ்க்கையை எளிதாக்க உதவும் தொலைபேசி, அதன் அதிகப்படியான பயன்பாடு உங்கள் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மக்கள் தூங்கும் போது கூட தங்கள் தொலைபேசிகளை தங்களிடம் வைத்திருக்கிறார்கள். செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்துவதாக பலர் கூறி கேள்விப்பட்டிருப்போம்.
இந்த பதிவும் உதவலாம் : இது புற்றுநோயின் அறிகுறிகள்! லேசா விட்ராதீங்க..
நம்மில் பலர் தூங்கும் போது தொலைபேசியை தலை அல்லது மார்புக்கு அருகில் வைத்திருப்போம். இப்படி செய்வது உண்மையில் புற்றுநோயை உண்டாக்குமா? இது குறித்த உண்மையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தூங்கும் போது தலை அல்லது மார்புக்கு அருகில் போனை வைத்தால் புற்றுநோய் வருமா?

போன்களை அதிகமாக பயன்படுத்துபவர்கள் அடிக்கடி தலைவலி, கண் வலி மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் புற ஊதா கதிர் இரண்டும் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால் மூளை, தசைகள் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
இருப்பினும், தூங்கும் போது தொலைபேசியை தலை அல்லது மார்புக்கு அருகில் வைத்திருப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறித்து விஞ்ஞானிகள் இதுவரை உறுதியான தகவலைக் கண்டுபிடிக்கவில்லை. இதைப் பற்றி இன்னும் பல ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது.
இந்த பதிவும் உதவலாம் : தோல் புற்றுநோய்: கவனிக்க வேண்டிய 7 அறிகுறிகள்
இது குறித்து பாபு ஈஸ்வர் ஷரன் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் சமீர் கூறுகையில், "மொபைல் ஃபோன்கள் ரேடியோ அலைவரிசை மின்காந்த கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன, மேலும் இந்த கதிர்வீச்சு அயனியாக்கம் செய்யாது. இது டிஎன்ஏவுக்கு சேதம் விளைவிக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. ஆனால் இதன் காரணமாக, ஆரோக்கியத்திற்கு பல கடுமையான தீங்குகள் நிச்சயமாக ஏற்படலாம். ஃபோன் கதிர்வீச்சு காரணமாக புற்றுநோய் அல்லது மூளைக் கட்டி உருவானதாக இதுவரை துல்லியமான தகவல்கள் எதுவும் வரவில்லை".

ஐரோப்பிய இதயவியல் சங்கம் (ESC) வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிக்கணக்கில் மொபைல் போனில் பேசுவது கதிர்வீச்சு காரணமாக உங்கள் உடலை பாதிக்கிறது என்றும் கூறுகிறது. இதன் காரணமாக, நீங்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.
இந்த பதிவும் உதவலாம் : குடல் புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள்!
வாரத்திற்கு 30 நிமிடங்களுக்கு மேல் போனில் பேசுபவர்களுக்கு, போன் பயன்படுத்தாதவர்களை விட உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இதற்கான சரியான காரணங்கள் இந்த ஆய்வில் இதுவரை வெளிவரவில்லை.
Pic Courtesy: Freepik