Mother's Day 2024: டிஜிட்டல் யுகத்தில் இப்போதெல்லாம் எதுவும் சாத்தியமாகவே இருக்கிறது. முடியாதது என்று எதுவும் இல்லை. உணவு முறை உள்ளிட்ட காரணங்களால் மகப்பேறுக்கு கூட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. ஆனால் இதையும் சரிசெய்ய டிஜிட்டல் யுகத்தில் வழியுள்ளது.
பெரும்பாலான இளைய தலைமுறை ஆண்கள், பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் முன்னேற்ற ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் பெற்றெடுத்த தாயை காக்க வேண்டியதும் நமது கடமைதான். இதை ஒருபோதும் தவிர்க்க முடியாது.
அன்னையர் தினம் 2024
பிடித்த உணவு, மொபைல், டிவி உள்ளிட்டவற்றை தாய் கேட்டு வாங்குக் கொள்வார். ஆனால் பல தாயாரால் நவீனயுக கேட்ஜெட்டை கண்டறிய முடியாது. இதை கண்டறிந்து அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டியது நமது கடமை.
பலர் தாய்க்கு அன்னையர் தினத்தில் அன்பளிப்பு வழங்க முடிவு செய்திருப்பார்கள் அவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். அப்படி முடிவு செய்யாமல் இருப்பவர்களும் இந்த பொருட்களை அன்பளிப்பாக வழங்கலாம்.
அன்னையர் தினத்தில் தாயார்க்கு வழங்க வேண்டிய அன்பளிப்பு
அன்னையர் தினத்தில் தாய்க்கு வழங்க வேண்டிய சிறந்த அன்பளிப்பு வகைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆக்சிமீட்டர்
இதய துடிப்பு அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை கண்காணிக்க ஆக்சிமீட்டர் மிக பயனுள்ளதாக இருக்கும். பெயர் குறிப்பிடுவது போல் ஆக்சிஜன் அளவை கணக்கிடவும் இது பேருதவியாக இருக்கும். மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளை கண்காணிக்க இது பேருதவியாக இருக்கும். ஆக்சிமீட்டர் இரத்த ஆக்ஸிஜன் அளவை கணிக்கிட பயன்படுத்தப்படுகிறது.
தெர்மோமீட்டர்
தெர்மோமீட்டர் என்பது இந்த காலக்கட்டத்தில் கட்டாயம் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டும். குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு. அதேபோல் கோடை வெயில் தாக்கம் உச்சம் தொடுகிறது. சில மாவட்டங்களில் இப்போது தான் மழை வர ஆரம்பித்துள்ளது.
இதன்காரணமாக உடல் வெப்பநிலை அவ்வப்போது மாறுபடுகிறது. இதை முறையாக அளவிட்டு பாதிப்பை அறிந்துக் கொள்ள தெர்மோமீட்டர் மிக முக்கியம். தெர்மோமீட்டர் உடல் வெப்பநிலையை கண்காணிக்க பேருதவியாக இருக்கும்.
இரத்த அழுத்த மானிட்டர்
இது ஆகச் சிறந்த பணி செய்யும் ஒரு கருவியாகும். டிஜிட்டல் யுகத்தில் மிக எளிதாக கிடைக்கும் கருவியாகும் இது. வீட்டிலிருந்தே ஒருவரின் ஆரோக்கியத்தை கண்காணிக்க பேருதவியாக இருக்கும். இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் இதை சரியாக கண்காணிக்கும்பட்சத்தில் பல நோய் பாதிப்புகளை சரிசெய்ய முடியும்.
உயிர் ஆபத்தையே தடுக்க முடியும். எனவே வயதானவர்கள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக இதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
குளுக்கோமீட்டர்
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதுகாப்பை அவ்வப்போது உறுதி செய்துக் கொள்வது அவசியம். இதற்கு குளுக்கோமீட்டர் பேருதவியாக இருக்கும் என இதை கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்வது அவசியம்.
ஈசிஜி மானிட்டர்
ECG மானிட்டர் என்றவுடன் அனைவரும் சிந்திப்பது மருத்துவமனை தான். ஆனால் டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் சிறிய வடிவத்தில் வீட்டிலேயே கிடைக்கக் கூடிய வடிவில் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இந்த ஈசிஜி மானிட்டரை வீட்டிலேயே வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
இது சிறிய தனிப்பட்ட கேட்ஜெட் வகையாகும். உங்கள் இதயம் சரியாக இயங்குகிறதா இல்லையா என்பதை அறிய இது பேருதவியாக இருக்கும். இதை ஸ்மார்ட்போனுடனும் எளிதாக இணைக்க முடியும். இதில் உடல் வெப்பநிலை உள்ளிட்ட பல உடல்நிலைகளை கண்காணிக்க முடியும்.
Image Source: FreePik