
சமீபத்தில் சமூக வலைதளங்களில், பிரபலங்கள் முகத்தில் “சிவப்பாக ஒளிரும் மாஸ்க்” அணிந்து புகைப்படம் பகிர்வதை நீங்கள் கண்டிருக்கலாம். கிம் கார்டாஷியன் முதல் தீபிகா படுகோனே வரை, பலரும் தற்போது விரும்பி செய்வது இந்த “LED Light Therapy” ஆகும். இது வெறும் அழகு பராமரிப்பு சிகிச்சை மட்டுமல்ல, உடல் மற்றும் மன நலனுக்கும் பல நன்மைகள் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். CK Birla Hospital, Gurgaon நிறுவனத்தின் உள் மருத்துவ நிபுணர் டாக்டர் துஷார் தயால் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
LED லைட் தெரபி என்றால் என்ன?
“LED லைட் தெரபி என்பது உடலுக்கு உட்புகாத (non-invasive) சிகிச்சை முறையாகும். இதில் குறிப்பிட்ட நிற ஒளி அலைநீளங்கள் சருமத்தின் வெவ்வேறு அடுக்குகளுக்குள் சென்று, செல்களின் செயல்பாட்டை மாற்றுகிறது” என்று டாக்டர் தயால் கூறுகிறார்.
அதாவது, சிவப்பு மற்றும் இன்ஃப்ராரெட் ஒளி சருமத்தின் ஆழம் வரை சென்று செல்களின் சக்தியை அதிகரிக்கிறது, வீக்கத்தை குறைக்கிறது. நீல ஒளி (Blue light) சருமத்தின் மேற்பரப்பில் செயல்பட்டு முகப்பரு உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் சருமம் சீராகி, புண்கள் விரைவாக ஆறும், மேலும் காலஜன் (Collagen) உற்பத்தி அதிகரித்து சுருக்கங்கள் குறையும்.
LED லைட் தெரபி தரும் முக்கிய நன்மைகள்
டாக்டர் தயால் கூறுகையில், LED லைட் தெரபி பல வகை பிரச்சனைகளில் உதவுகிறது:
* முகப்பரு மற்றும் முகப்பரு பாக்டீரியா கட்டுப்பாடு
* சுருக்கங்கள் மற்றும் வயதான சருமத்தை சீர்செய்தல்
* சருமம் மென்மையாக்கம் மற்றும் பிரகாசம்
* காயம் ஆறுதல் மற்றும் வீக்கம் குறைப்பு
* தலையில் முடி உதிர்வைத் தடுக்குதல்
* சருமத்தில் அழற்சி மற்றும் சிவத்தன்மை குறைப்பு
பயன்கள் காணப்படும் நிலைகள்
* முகப்பரு (Acne)
* சொரியாசிஸ் (Psoriasis)
* ஈக்சிமா (Eczema)
* ரோஸேஷியா (Rosacea)
* சூரிய காயம் (Sun Damage)
* சுருக்கங்கள் (Wrinkles)
* சருமம் தளர்வு (Skin Sagging)
மனச்சோர்வு சிகிச்சைக்கும் LED தெரபி பயன்படுமா?
பலர் LED ஒளி சிகிச்சை மனநிலையை மேம்படுத்தும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு “ஆம். பிரைட்-லைட் தெரபி எனப்படும் LED ஒளி சிகிச்சை Seasonal Affective Disorder (SAD) என்ற மனச்சோர்வு நோய்க்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது கண்களில் வெள்ளை ஒளி படும்வழி, தூக்க சுழற்சியையும், மனநிலையையும் சீராக்குகிறது” என்று டாக்டர் தயால் விளக்குகிறார். சிலர் இதை மனநல ஆலோசனை அல்லது மருந்துகளுடன் சேர்த்து மேற்கொள்ளும் போது சிறந்த பலன் காணலாம்.
சருமத்தை மேம்படுத்தும் LED லைட் தெரபி செயல்முறை
சிவப்பு ஒளி:
* காலஜன் உற்பத்தியை தூண்டி சுருக்கங்களை குறைக்கும்
* சருமம் இளமையாகவும் பிரகாசமாகவும் மாறும்
நீல ஒளி:
* முகப்பரு பாக்டீரியாவை அழிக்கும்
* முகம் சுத்தமாகவும் தெளிவாகவும் மாறும்
இன்ஃப்ராரெட் ஒளி:
* ஆழமான காயங்கள் ஆற உதவும்
* இரத்த ஓட்டத்தை அதிகரித்து திசுக்களை புதுப்பிக்கும்
மருத்துவ ஆய்வுகளின் படி, LED தெரபி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் முகப்பரு, சுருக்கம், மற்றும் சரும வீக்கம் ஆகியவற்றில் கணிசமான மாற்றம் காணப்படுகிறது.
LED தெரபியின் பக்கவிளைவுகள்
LED தெரபி பொதுவாக பாதுகாப்பானதாக இருந்தாலும், சில நேரங்களில் சிறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம்:
* சிறிது சிவத்தல் அல்லது அரிப்பு
* சருமம் உலர்தல்
* ஒளி அதிகமாக இருப்பின் சூடேற்றம்
*கண்களுக்கு ஒளி பாதுகாப்பு இல்லையெனில் பாதிப்பு
கர்ப்பிணிகளுக்கு இது பாதுகாப்பானதா?
“குறைந்த வலிமை கொண்ட LED ஒளி கர்ப்பிணிகளுக்கு பெரிதாக தீங்கு விளைவிக்கும் ஆதாரம் இல்லை. ஆனால் கர்ப்ப காலத்தில் சருமம் மிகுந்த உணர்தன்மையுடன் இருக்கும் என்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்” என்று கர்ப்பிணிகளுக்கு LED தெரபி குறித்து டாக்டர் தயால் கூறுகிறார்.
இறுதியாக..
LED லைட் தெரபி என்பது சருமத்திற்கு மற்றும் மனநிலைக்கு இரண்டுக்கும் நன்மை செய்யும் புதிய தலைமுறை சிகிச்சை முறையாகும். இது முகப்பரு, சுருக்கம், அழற்சி, மற்றும் சோர்வான சருமம் ஆகியவற்றை சீர்செய்ய உதவுகிறது. ஆனால் சரியான கருவி, சரியான ஆலோசனை, மற்றும் சிகிச்சை காலஅளவு அவசியம்.
Disclaimer: இந்த கட்டுரை தகவலளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே. LED லைட் தெரபி தொடங்குவதற்கு முன், சரும நிபுணர் அல்லது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 10, 2025 18:29 IST
Published By : Ishvarya Gurumurthy