Dysania Causes: பலரும் இரவு முழுவதும் நன்றாக தூங்கினாலும் காலை எழும்போது சோம்பல் உணர்வோடு இருப்பார்கள். காலை படுக்கையில் இருந்து எழுவதே மிகவும் சிரமமாக இருக்கும். இரவு முழுவதும் தூங்கியிருந்தாலும் கூட, படுக்கையில் இருந்து எழுவது நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருக்கும். இத்தகைய உணர்வு உங்களுக்கும் உள்ளதா?,
அப்படி என்றால் முதலில் இந்த விஷயத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வை அனுபவிக்கும் நபர் நீங்கள் மட்டும் இல்லை. பலர் இந்த உணர்வை அனுபவிக்கிறார்கள். பெரும்பாலானோர் இதை வெறும் சோம்பல் என்று நினைக்கிறார்கள்.
முக்கிய கட்டுரைகள்
இதையும் படிங்க: சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்
இந்த பிரச்சனைக்கு ஒரு பெயர் உள்ளது. அது டிசானியா என்பதாகும். இது இன்னும் மருத்துவ ரீதியாக நிறுவப்படவில்லை, ஆனால் இந்த விஷயம் பலரிடம் பிரபலமடைந்து வருகிறது.
டிசானியா விளைவுகள் மற்றும் வைத்தியம்
டிசானியா என்ற சொல் இன்னும் மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட வார்த்தையாக இல்லை, ஆனால் காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க விருப்பமின்மை அல்லது இயலாமையின் அறிகுறிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மணிப்பால் மருத்துவமனையின் மனநல ஆலோசகர் டாக்டர் சயந்தனி முகர்ஜி இதுகுறித்து கூறிய தகவலை பார்க்கலாம்.
டிசானியா என்றால் என்ன?
டிசானியா என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிலை அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். டிசானியாவின் மூலகாரணங்கள் குறித்து டாக்டர் முகர்ஜி கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
டிசானியாவை அனுபவிப்பவர்கள், எழுந்தவுடன் மிகுந்த சோர்வு, தூக்கமின்மை போன்ற உணர்வை அடிக்கடி உணர்கிறார்கள், இதனால் அவர்களின் படுக்கையில் இருந்து எழுவது என்பது மிகுந்த சிரமமான விஷயமாக இருக்கிறது.
டிசானியாவுக்கான காரணங்கள்
சிலர் டிசானியாவை சோம்பேறித்தனம் என்று எண்ணிக் கொள்கிறார்கள், ஆனால் அது அப்படி இல்லை. டிசானியாவை சோம்பலில் இருந்து வேறுபடுத்துவது மிகவும் முக்கியமானது. இரண்டும் மேலோட்டமாக ஒத்ததாக இருந்தாலும், இவை இரண்டின் தாக்கமும் வெவ்வேறு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சோம்பேறித்தனம் என்பது ஒரு மந்தநிலை ஆகும், இது பணிகளை முடிக்கவும் செய்யவும் மன உறுதி இல்லாமை ஆகும். அதே சமயம் டிசானியா என்பது தூக்கத்திற்குப் பிறகு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நடக்கும் போராட்டமாகும்.
தூக்கக் கோளாறுகள்
தூக்கமின்மை, தூக்கத்தில் மூச்சுத் திணறல் அல்லது கால் வலி போன்ற நிலைகள் தூக்கத்தின் தரத்தை சீர்குலைக்கும். இதனால் தனிநபர்கள் காலையில் அதிக சோர்வை உணர்கிறார்கள்.
மனநலப் பிரச்சனை
மனச்சோர்வு, மன உளைச்சல், பதட்டம் போன்ற மனநலப் பிரச்சனைகள் அதிக சோர்வு மற்றும் ஊக்கமின்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும். இதனால் படுக்கையில் இருந்து எழுவது கடினமான செயலாக இருக்கிறது.
போதைப்பொருள் பயன்பாடு
போதைப் பொருள் பயன்பாடும் டிசானியாவை ஏற்படுத்தலாம். இதை இரவில் உட்கொள்வது என்பது காலையில் எழமுடியாத உணர்வை ஏற்படுத்துகிறது. அந்த நாளையே மந்தமாக தொடங்க வைக்கிறது. இது மூளையின் இரசாயனங்கள் சீர்குலைந்து காலையில் சோம்பலைத் தூண்டும்.
மன அழுத்தம்
அதிக அளவு மன அழுத்தம் தூக்கத்தின் தரத்தை மோசமாக்கும். இது காலையில் டிசானியாவை ஏற்படுத்தும்.
நாள்பட்ட நோய்கள்
நாள்பட்ட நோய்களின் அறிகுறியாகவும் தொடர்ந்து சோம்பல் உணர்வு ஏற்படலாம். இது காலையில் எழுவதை சவாலாக மாற்றுகிறது. இது உங்களுக்கு டிசானியா நிலையை ஏற்படுத்தலாம்.
பிற வாழ்க்கை முறைகள்
ஒழுங்கற்ற தூக்க முரைகள், மோசமான உணவு, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான ஆல்கஹால், காஃபின் நுகர்வு போன்றவையும் டிசானியாவை ஏற்படுத்தலாம்.
டிசானியா சிகிச்சை
டிசானியாவைச் சமாளிப்பதற்கான வழிகள் குறித்து பார்க்கலாம். டிசானியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கு முன் சரியான காரணங்களை கண்டறிவது முக்கியம். ஏனெனில் இதுவே பெரிதளவு உதவியாக இருக்கும். பலருக்கும் இந்த பிரச்சனை ஏற்பட பொதுவான காரணங்களாக மனநல கோளாறு மற்றும் போதைப் பொருள் உட்கொள்ளல் தான் இருக்கிறது.
நிலையான தூக்க அட்டவணை முக்கியம்

எந்தவொரு நபருக்கும் சரியான தூக்கம் என்பது மிக முக்கியம். தினசரி சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுந்திருப்பது அவசியம். தூக்கத்தின் தரத்தையும் தீவிரப்படுத்திக் கொள்ளுங்கள். தினசரி குறைந்தது 8 மணிநேரம் தூங்குங்கள்.
உடல் செயல்பாடுகள்
உடற்பயிற்சி, யோகா, வாசிப்பு, தியானம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளுங்கள். இது உங்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
ஸ்க்ரீன் தரத்தை அளவிடுவது அவசியம்
டிஜிட்டல் யுகத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் திரை அணுகல் தான். உங்களது டிஸ்ப்ளே பயன்பாட்டு நேரத்தை அளவிடவும். டிஸ்ப்ளேயில் வெளியாகும் ப்ளூ ஒளி உங்கள் தூக்கத்தில் குறுக்கிடலாம். படுக்கைக்கு ஒரு மணிநேரத்திற்கு முன் டிஸ்ப்ளே அணுகலை நிறுத்தவும்.
இதையும் படிங்க: Frequent Cold and Cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!
டிசானியா என்பது பலர் எதிர்கொள்ளும் பொதுவான ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத போராட்டமாகும். இந்த உணர்வை முறையாக வகைப்படுத்த வேண்டியது முக்கியம். ஒரு மனிதருக்கு தூக்கம் என்பது பிரதான ஒன்று. நீங்கள் அதீத தூக்கமின்மையால் அவதிப்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik