Side Effects Of Excessive Standing: பல சமயங்களில் நமது வேலை காரணமாக நீட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது எப்போதாவது நடந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், தினமும் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால், அது உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம்! இது மட்டுமல்ல, நீங்கள் அதை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக அமையலாம். அந்தவகையில், நாம் நீண்ட நேரம் நிற்பதால் என்ன மாதிரியான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்பது குறித்து, யாஷ் ஃபிட்னஸ் பயிற்சியாளர் யாஷ் அகர்வாலிடம் பேசினோம். அவர் கூறிய விஷயங்கள் இங்கே-
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?
கால்களில் வீக்கம் (Leg Swelling)

தினமும் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், அது உங்கள் கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். உண்மையில், நாம் நீண்ட நேரம் நின்றபடியே இருந்தால் உடலின் கீழ் பகுதியில் இரத்தம் குவிந்துவிடும். காலில் வீக்கம் படிப்படியாக அதிகரிப்பதற்கு இதுவே காரணம். இதனால், பாதங்களில் வலி ஏற்படத் தொடங்குகிறது.
தசை சோர்வு (Muscle Fatigue)

நாம் நீண்ட நேரம் நின்றால், கால்களில் வலி ஏற்படுவது இயல்பு. ஆனால், ஓய்வே இல்லாமல் நாம் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், கால் தசைகள் சோர்வடையும். இதனால், நிற்பதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம். எனவே, குறிப்பிட்ட நேரம் ஓய்வெடுப்பது அவசியம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சிறிது நேரம் உட்கார்ந்து அல்லது நடைபயிற்சி செய்யுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்
வெரிகோஸ் வெயின் (Varicose Veins)

நீண்ட நேரம் நிற்பதால் வெரிகோஸ் வெயின் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெரிகோஸ் வெயின் நோய் ஏற்பட்டால், கால்களில் உள்ள நரம்புகள் வீங்கி, அதிக வலியை ஏற்படுத்தும். இந்நோய் ஏற்படுவதற்கு காரணம், நீண்ட நேரம் நிற்பதால் பாதங்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. நரம்புகளில் அழுத்தம் அதிகரிப்பதால், இரத்த ஓட்டம் தடைபடத் தொடங்குகிறது.
முதுகு வலி (Lower Back Pain)

பொதுவாக நாம் சில மணி நேரம் தொடர்ந்து நின்றால், கால்கள், இடுப்பு மற்றும் முதுகில் வலி அதிகரிக்கும். குறிப்பாக, கீழ் முதுகில் வலி கடுமையாக இருக்கும். உண்மையில், நீண்ட நேரம் நிற்பது உங்கள் தண்டுவடத்தை மோசமாக்குகிறது, இது இடுப்பு வலி அல்லது முதுகுவலிக்கு வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : common monsoon diseases: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்
மூட்டு வலி (Joint Pain)

நீண்ட நேரம் நிற்பதால் மூட்டுகளில் வலி ஏற்படுவைத்து நாம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, இது முழங்கால்களில் அதிகரிக்கிறது. ஒருவருக்கு மூட்டுவலி அல்லது மூட்டு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும். பலவீனமான எலும்புகள் உள்ளவர்கள் கீழே விழுந்து எலும்புகள் உடைவதற்கான அபாயமும் அதிகம்.
முதுகெலும்பில் வலி (Stress on the Spine)

நீண்ட நேரம் நிற்பதால், முதுகுத்தண்டில் அடிக்கடி வலி ஏற்படத் தொடங்கும். உண்மையில், நீண்ட நேரம் நிற்பதால், தண்டுவடம் பலவீனமாகலாம். மோசமான வாழ்க்கை முறையால் முதுகுத்தண்டில் வலியை ஏற்படுத்துகிறது. இது நிகழாமல் தடுக்க, தொடர்ந்து நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம் : Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது
இரத்த ஓட்டம் (Circulatory Issues)

அதிக நேரம் நிற்பதால், கால்களில் அழுத்தம் ஏற்படுவதுடன், நரம்புகளின் அழுத்தமும் அதிகரிக்கிறது. இதனால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இது இன்னும் மேசமடைந்தால், இரத்தம் உறைதல் பிரச்சனையும் ஏற்படுகிறது.
Pic Courtesy: Freepik