Disease X என்றால் என்ன? எச்சரிக்கை மணி அடித்த விஞ்ஞானிகள்!

  • SHARE
  • FOLLOW
Disease X என்றால் என்ன? எச்சரிக்கை மணி அடித்த விஞ்ஞானிகள்!


Disease X: உலகம் முழுவதிலும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முற்றிலுமாக தடுக்கப்படாமல் இருந்த நிலையில், புதிய நோய் ஒன்று பரவம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றை விட மிக ஆபத்தான சர்வதேச தொற்றாக மாற அதிக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் Disease X என அழைக்கப்படுகிறது.

இது கொரோனாவை விட 7 மடங்கு வேகமாக பரவுகிறது என UK தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம் கூறியுள்ளார். அதேபோல் சுகாதார நிறுவனங்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனமும் (WHO) இது தொடர்பாக மக்களை எச்சரித்துள்ளது.

Disease X குறித்து நிபுணர்கள் கருத்து

Disease X நிகழ்வுகளின் ஆரம்ப தோற்றம் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நிபுணர்கள் கூறிய தகவல்படி, தற்போதுள்ள இந்த வைரஸ் வேகமாக மாறுகிறது, இதன் காரணமாக இந்த நோய் வேகமாக பரவுகிறது. Taskforce ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த கேட் பிங்காம் கூறிய தகவலை பார்க்கையில், கடந்த 1918-19ம் ஆண்டில் பரவிய ஃப்ளூ பெருந்தொற்றில் 50 மில்லியன் பேர் உயிரிழந்தனர். இது முதல் உலகப் போரை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.

சமீபகாலமாக பரவிவரும் பல பெருந்தொற்றுகளும், வைரஸ்களும் லட்சக்கணக்கானோரை பலியாக்கியுள்ளது. அந்த வைரஸ்கள் இன்றளவும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பகுதிகளில் உயிர் வாழ்ந்து வெவ்வேறு திரிபுகளாக மக்களை பாதித்துக் கொண்டு இருக்கிறது என்றார்.

ஆபத்தான Disease X

இந்த நோயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார நிறுவனம், இதற்கு Disease X என்று பெயரிட்டுள்ளது. மேலும் இது கொரோனா தொற்றை விட 7 மடங்கு வேகமாக பரவி 20 மடங்கு அதிகமான மக்களை கொல்லும் என்றும் எச்சரித்துள்ளது.

தடுப்பூசி பணி தொடக்கம்

இந்த நோயை எதிர்த்துப் போராட பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஏற்கனவே Disease X நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியைத் தொடங்கிவிட்டனர். தடுப்பூசியின் வளர்ச்சியின் மூலம் இந்த நோயின் தாக்கத்தை குறைக்க முடியும். இந்த நோயைக் கருத்தில் கொண்டு, விஞ்ஞானிகள் இதுவரை 25 வைரஸ்களை ஆய்வு செய்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் பல நோய்கள் பரவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விலங்குகளுடனான நமது தொடர்பு அதிகரித்துள்ளது, இது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும்.

Image Source: FreePik

Read Next

Dysania Causes: காலையில் படுக்கையில் இருந்து எழுவதே கடினமாக இருக்கிறதா? உஷார்!

Disclaimer

குறிச்சொற்கள்