Doctor Verified

ஒரே ஃபேஸ் பேக்.. பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வு!

கரும்புள்ளி, கருவளையம், ஓபன் போர்ஸ் நீங்க உளுந்து மாவு ஃபேஸ் பேக் எப்படி பயன்படுத்துவது? இயற்கை சரும பராமரிப்பு குறிப்புகள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
ஒரே ஃபேஸ் பேக்.. பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வு!

இன்றைய காலகட்டத்தில் சருமப் பிரச்சனைகள் பலருக்கும் பெரிய கவலையாக மாறியுள்ளது. கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், கருவளையங்கள், வெயிலால் ஏற்படும் கருமை, சீரற்ற சரும நிறம், திறந்த துவாரங்கள் (Open Pores) போன்றவை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களையும் அதிகமாக பாதித்து வருகின்றன. இத்தகைய பிரச்சனைகளுக்கு ரசாயன க்ரீம்கள் அல்லாமல், வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய ஒரு இயற்கை ஃபேஸ் பேக் நல்ல தீர்வாக இருக்கிறது.


முக்கியமான குறிப்புகள்:-


'மேஜிக்' உளுந்து மாவு ஃபேஸ் பேக்

சருமத்தை மென்மையாக்கவும், இயற்கையான பிரகாசத்தை திரும்பப் பெறவும் உளுந்து மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தில் சேர்ந்துள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்திற்கு உடனடி பளபளப்பை வழங்கும்.

தேவையான பொருட்கள்

  • உளுந்து மாவு – 1 ஸ்பூன்

(வீட்டிலேயே உளுந்தை கழுவி, காயவைத்து அரைத்த மாவு அல்லது கடையில் கிடைக்கும் வறுக்காத உளுந்து மாவு)

  • தேன் – ¾ ஸ்பூன் (விருப்பத்திற்கேற்ப)

(தேன் ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்க்கலாம்)

இதையும் படிங்க: ஏழே நாளில் உங்க சருமம் பளபளப்பாக இந்த டயட் பிளான் பின்பற்றுங்க.. மருத்துவர் ஹன்சாஜி பரிந்துரை

ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை

உளுந்து மாவும் தேனும் சேர்த்து நன்றாகக் கலந்து, மென்மையான பேஸ்ட் உருவாக்க வேண்டும். இந்த கலவையை முகம் முழுவதும் சமமாகப் பூசவும்.

பயன்படுத்தும் முறை

  • முகத்தில் பூசிய பின் 10–15 நிமிடங்கள் காய விடவும்
  • பின்னர், மெதுவாக மசாஜ் செய்தவாறே குளிர்ந்த நீரில் கழுவவும்
  • வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்

என்ன நன்மைகள் கிடைக்கும்?

  • கரும்புள்ளிகள் மெதுவாகக் குறையும்
  • ஓபன் போர்ஸ் சுருங்க உதவும்
  • சரும நிறம் சமமாகும்
  • முகம் இயற்கையாக பளபளக்கும்
  • ரசாயனமில்லாத பாதுகாப்பான சரும பராமரிப்பு

இறுதியாக..

சருமத்தை வெள்ளையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க விலையுயர்ந்த க்ரீம்கள் அவசியமில்லை. உளுந்து மாவு – தேன் ஃபேஸ் பேக் போன்ற எளிய வீட்டுச் சிகிச்சைகள் தொடர்ந்து பயன்படுத்தினால், சருமத்தில் கணிசமான மாற்றத்தை நீங்களே உணரலாம். பொறுமையும் தொடர்ச்சியும் தான் அழகின் ரகசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவலுக்காக மட்டுமே. அதீத சரும உணர்திறன், அலர்ஜி அல்லது நீண்டகால சரும நோய்கள் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும் முன் சரும நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம். புதிய பொருட்களை முகத்தில் பயன்படுத்தும் முன் Patch Test செய்யவும்.

Read Next

ஏழே நாளில் உங்க சருமம் பளபளப்பாக இந்த டயட் பிளான் பின்பற்றுங்க.. மருத்துவர் ஹன்சாஜி பரிந்துரை

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 22, 2025 20:41 IST

    Published By : Ishvarya Gurumurthy