பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டு வருகிறது. வெப்ப அலை வாட்டி வதைக்கிறது. வழக்கத்தை விட அதிகமாக வெயில் தாக்கம் இருப்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டது. இதனால் பலரும் அச்சத்தில் இருந்தனர். எப்போதும் ஏப்ரல் மாதம்தான் வெயிலின் தாக்கம் ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் உச்சம் தொட ஆரம்பித்துவிட்டது.
தமிழ்நாடு வெயில் தாக்கம்
சரி, இதெல்லாம் தெரிந்த விஷயமே என்றாலும் மறுபுறம் தமிழகத்தில் ஒருசில இடங்கள் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பெயக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை மாறுபாட்டின் காரணமாக மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடுக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், அரியலூர், கோவை, கன்னியாகுமரி, பெரம்பலூருக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுக்கிறது.

வெப்ப அலை தாக்கம்
வெப்ப அலை குறித்து பார்க்கையில், தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 6ம் தேதி வரை வெப்ப அலை வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மழை விவரம்
மேலும் வரும் 7, 8ம் தேதிகளில் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எது எப்படியோ வரும் 6ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது. 6ம் தேதிக்கு பிறகு சற்று தணியலாம் அதுவரை மிக கவனமாக இருங்கள். போதுமான தண்ணீர் குடித்து உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது எக்காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ உதவும் சிறந்த வழியாகும்.
Image Source: FreePik