தனித்தனி படுக்கையில் தூங்கும் கணவன் - மனைவி... Sleep Divorce ஆபத்து பற்றி தெரியுமா?

இந்தியாவில் கணவன் - மனைவிக்குள் ஸ்லீப் டிவோர்ஸ் எனப்படும் தூக்க விவாகரத்து அதிகரித்து வருவதாக அதிர்ச்சியூட்டும் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
  • SHARE
  • FOLLOW
தனித்தனி படுக்கையில் தூங்கும் கணவன் - மனைவி... Sleep Divorce ஆபத்து பற்றி தெரியுமா?

இந்தியாவில் கணவன் - மனைவிக்குள் ஸ்லீப் டிவோர்ஸ் எனப்படும் தூக்க விவாகரத்து அதிகரித்து வருவதாக அதிர்ச்சியூட்டும் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

திருமணமான தம்பதிகள் தற்போது தனித்தனி பெட்டுகளில் தனித்தனியாக தூங்கும் பிரச்சனை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 78 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இந்திய தம்பதிகள் இப்படி தனித்தனியாக தூங்குவதை விரும்புகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. இப்படி தம்பதிகள் தனித்தனியாக தூங்குவதற்கு ஸ்லீப் டிவோர்ஸ் அதாவது தூக்க விவாகரத்து எனவும் பெயரிடப்பட்டிருக்கிறது தூக்க விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம் இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியர்களிடையே அதிகரிக்கும் ஆபத்தான பழக்கம் (What is Sleep Divorce):

2024ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 20 சதவீத தம்பதிகள் அடிக்கடி தூக்க விவாகரத்தை மேற்கொள்வதாகவும், 15 சதவீத தம்பதிகள் தொடர்ச்சியாக தூக்க விவாகரத்தை மேற்கொள்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தூக்க விவாகரத்தை முயற்சிக்கிறவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் நன்றாக உறங்குவதாகவும் தூக்க ஆராய்ச்சி மையங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

image

What Is a Sleep Divorce

அதாவது தம்பதியர் ஒன்றாக ஒரே படுக்கையில் நன்றாக உறங்குவதை விட தனித்தனியாக படுக்கைகளில் உறங்கும்போது 37 நிமிடங்களுக்கு மேல் உறங்குவதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அப்படி தம்பதிகள் உறங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக குறட்டையும் வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன.

ஸ்லீப் டிவோர்ஸுக்கான காரணங்கள் என்ன?

உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாகவும் அது பல்வேறு பிரச்சனை உண்டாக்குவதாகவும் கூறப்படுகிறது. அப்படி பாதிக்கப்படுபவர்கள் வாரத்தில் நான்கு இரவுகள் மட்டுமே ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்வதாகவும், மூன்று இரவுகள் அமைதியின்மை போதுமான தூக்கமின்மை என அவதிக்குள்ளாவதாகவும் கூறப்படுகிறது.

image

What Is a Sleep Divorce

தூக்கமின்மை என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல மன ஆரோக்கியம் வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதுவும் ஆண்களை விட பெண்கள் தான் தூக்கவின்மையால் அவதிக்குள்ளாவதாக கூறப்படுகிறது.

அதாவது வாரத்திற்கு சராசரியாக 3.83 சதவீதம் இரவில் ஆண்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கிறது என்றால், மாதவிடாய் அதனை தொடர்ந்து ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகள் கர்ப்பகால பிரச்சனைகள் என ஆண்களை விட குறைவாகவே பெண்கள் உறங்குவது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 29 சதவீத ஆண்களோடு ஒப்பிடும்போது 38 சதவீத பெண்கள் உறங்குவதில் சிரமப்படுவதாகவும் 45 சதவீத ஆண்களோடு ஒப்பிடும்போது 51 சதவீத பெண்கள் உறங்குவதில் சிரமப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தனித்தனியே உறங்குவதால் ஏற்படும் அபாயம் என்ன?

தூக்கமின்மையால் அவதிப்படும் தம்பதிகள் தூக்க விவாகரத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அதே நேரம் ஒவ்வொரு மனிதருக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானதுதான் தம்பதிகள் தனித்தனி படுக்கைகளில் உறங்குவதால் ஒப்பீட்ட அளவில் நீண்ட நேரம் தூக்கம் கிடைக்கலாம் . ஆனால் இப்படி தனியாக உறங்குவதால் கணவன் மனைவிக்கு இடையிலான காதல் அன்பு நேசம் நெருக்கம் உள்ளிட்டவற்றை குறைக்கும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

image

What Is a Sleep Divorce

எனவே எந்தெந்த காரணங்கள் தம்பதியரிடையே தூக்கத்தை கெடுக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டுமே தவிர தனித்தனியாக உறங்குவது முழுமையான தீர்வாக அமையாது என்றும், தூக்க விவாகரத்தே ஒரு கட்டத்தில் திருமண விவாகரத்து ஆகிவிடும் அபாயமாக மாறிவிடலாம் அது ஒரு சில தம்பதிகருக்கு ஒட்டுமொத்த தூக்கத்தையும் கெடுக்கலாம் எனவும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

Read Next

Late Marriage Issues: தாமதமாக திருமணம் செய்யும் தம்பதிகள்... இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க தயாராகுங்கள்!

Disclaimer