$
பாலியல் உறவு இன்பத்தை மட்டுமல்ல, சில சமயங்களில் பாலியல் ரீதியான நோய்களுக்கும் காரணமாகலாம். எனவே தொற்று ஏற்படாமல் இருக்க இந்த 6 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்.
தினமும் உடலுறவு கொள்வது ஆரோக்கியமானது. ஆனால், பலருடன் உடலுறவு கொள்வது மகிழ்ச்சியுடன் சேர்த்து, பாலியல் நோய்களையும் தருகிறது. ஆபத்தான எச்.ஐ.வி எய்ட்ஸ் தவிர, பிற பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி) பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
இந்த பின்னணியில், நீங்களும் உங்கள் துணையும் உடலுறவின் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் உங்கள் செக்ஸ் வாழ்க்கை மிகவும் சுமூகமாகவும் சுகமாகவும் இருக்கும்.
உடலுறவுக்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- உடலுறவு கொள்வதற்கு முன் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உங்களில் யாருக்காவது செக்ஸ் தொடர்பான பிரச்சனைகள் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனைகள் பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயத்தில் பரஸ்பர சம்மதம் முக்கியமானது.
- ஆணுறையைப் பயன்படுத்துவது உங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் வழங்குகிறது. லேடெக்ஸ் ஆணுறைகளைப் பயன்படுத்துவதால் நோய்கள் வராது.
- வாய்வழி செக்ஸ் செய்யும் போது டென்டல் டெம்ஸ் (Dental Dams) எனப்படும் பாதுகாப்பு உறையை பயன்படுத்துவது நல்லது.
- உடலுறவுக்குப் முன்பு உங்களுடைய அந்தரங்க உறுப்புகளை சுத்தப்படுத்துங்கள், இது எந்த தொற்று முகவர்களையும் அகற்றும். சுத்தமான உடலுறவு.. உங்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- பெண்கள் உடலுறவு கொண்ட உடனேயே சிறுநீர் கழிக்கப்பதையும், பிறப்புறுப்பை சுத்தம் செய்யவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் UTI ஐ தவிர்க்க முடியும்.
- ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV), ஹெபடைடிஸ் பி (HBV) போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது நல்லது.
உடலுறவுக்கு பின் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் என்னென்ன?
- உடலுறவு சிறுநீர் பாதை நோய்த்தொற்றை (UTI) உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். ஏனென்றால், உடலுறவின் போது சருமத்தில் காணப்படும் பாக்டீரியாக்கள் உங்கள் சிறுநீர்க்குழாயில் நுழையலாம். உடலுறவு முடிந்து சிறிது நேரத்திற்குப் பிறகு சிறுநீர் கழிப்பது இந்த வகையான பாக்டீரியாக்களை உங்கள் அமைப்பிலிருந்து வெளியேற்ற உதவும்.
- பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு திட்டமிடப்படாத கர்ப்பத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உடலுறவுக்கு மூன்று வாரங்கள் கழித்து கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் கர்ப்பமாக இருக்கும்பட்சத்தில், மருத்துவர்கள் இயல்பாகவே ஹெச்ஐவி பரிசோதனைக்கு பரிந்துரைப்பார்கள் என்பதால், இது தொற்று அபாயத்தை குறைக்க உதவும்.
- உடலுறவுக்குப் பிறகு பாலியல் ரீதியான சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசிப்பது நல்லது. இது பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை முன்கூட்டியே அறியவும்.பாலிய ரீதியிலான நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உதவும்.
- வருடத்திற்கு ஒரு முறையாவது பாலியல் ரீதியிலான தொற்றுக்கள் குறித்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பலருடன் உடலுறவு கொள்ளும் ஆண், பெண் யாராக இருந்தாலும் கட்டாயம் இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
Image Source: Freepik