உங்கள் காலையை எப்படி தொடங்குகிறீர்களோ, அதுதான் உங்களுடைய ஒட்டுமொத்த நாளையும் தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு நீங்கள் படுக்கையில் இருந்து தாமதமாக எழுந்தால், அலுவலகத்திற்கு கிளம்புவது முதல் மீட்டிங், வேலை, வீட்டிற்கு திரும்புவது என ஒட்டுமொத்த நாளுமே தாமதமாகிவிடும். எனவே, உங்கள் காலையை நல்ல முறையில் தொடங்குவது மிகவும் முக்கியம்.
ஆனால், அடிக்கடி நாம் செய்யும் சில தவறுகள் நமது ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாமல் போகிறது. உங்கள் காலைப்பொழுது நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமெனில், உங்களின் சில பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி என்னென்ன பழக்கங்களை கையாள வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள்…
முக்கிய கட்டுரைகள்
காலை உணவை சாப்பிட மறக்காதீர்கள்:
பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவை மறந்து விடுகிறோம் அல்லது காலை உணவை சாப்பிடவே மாட்டோம். காலையில் பிரேக் பஸ்ட்டைத் தவிர்ப்பது உங்களுடைய எனர்ஜி மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் குறைக்கிறது. இதன் காரணமாக, நீங்கள் நாள் முழுவதும் சோம்பலாக உணர்வதோடு, வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது.

மேலும், நீங்கள் வெறும் வயிற்றில் இருப்பது மனரீதியாகவும் பலவீனமடையச் செய்யும் என்பதால் எரிச்சல் அடைய வைக்கும். எனவே தினமும் காலை உணவை உண்ணுங்கள். உங்கள் காலை உணவில் பழங்கள், பருப்பு வகைகள், பால் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி:

தினமும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கவும். உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் நல்ல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இது உங்களை நல்ல மனநிலையில் வைத்திருக்கும். இது உங்கள் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது பல நோய்களைத் தடுக்கிறது.
நிறைய தண்ணீர் குடிக்கவும்:
தண்ணீர் பற்றாக்குறை உங்கள் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலம் நாளை தொடங்குங்கள்.
அதுமட்டுமின்றி, தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். எனவே காலையில் காபி குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம்.
நாளை திட்டமிடுங்கள்:
பெரும்பாலும் நாம் நமது நாளைத் திட்டமிடாமல் இருப்பதால், பல முக்கியமான பணிகளைத் தவறவிட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமானது. இது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
எனவே, தினமும் காலை அல்லது அதற்கு முந்தைய இரவில் உங்கள் நாளைத் திட்டமிடுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் நீங்கள் வேலையில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்.
செல்போன் பார்ப்பதை தவிர்க்கவும்:
மொபைல் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை மொபைல் நம்மிடம் இருக்கும். அதனாலதான், வழக்கமில்லாமல் அதிகாலையில் எழுந்தவுடனே செல்போனை பார்த்து நேரத்தை வீணடிக்கிறோம்.
இந்த பழக்கம் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது நம் மனதில் மன அழுத்தத்தையும் எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும். எனவே, காலையில் மொபைலைப் பார்ப்பதற்குப் பதிலாக, தியானம் செய்வது, இசையை கேட்பது என நாளை புத்துணர்ச்சியாக தொடங்க முயற்சிக்கலாம்.
Image Source: Freepik