Sat Sep 12, 2026 | 12:06 AM IST

Doctor Verified

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஸ்கின்கேர் ரொட்டீன் தேவையா? மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

பிறந்த குழந்தைகளுக்கு சரும பராமரிப்பு வழக்கம் செய்வதில் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. இது உண்மையில், அவர்களுக்கு அவசியமா, இல்லையா என்பதிலேயே குழப்பமடைகின்றனர். இதில் பிறந்த குழந்தைகளுக்கு சரும பராமரிப்பு வழக்கம் தேவையா என்பது குறித்து காணலாம்.

கர்ப்பத்தில் குழந்தை இருப்பது எவ்வளவு முக்கியமோ, குழந்தை பிறந்த பிறகும் அவர்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. பொதுவாக, குழந்தை பராமரிப்பு என்பது உணவு மற்றும் தூக்கத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அவர்களின் மென்மையான சருமத்தைப் பாதுகாப்பதும் சமமாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், புதிதாகப் பிறந்த குழந்தையின் சருமம் பெரியவர்களை விட மிகவும் மென்மையானதாகவும், மெல்லியது மற்றும் உணர்திறன் கொண்டதாகவும் காணப்படும். எனவேதான் அவர்களின் சருமம் விரைவாக வறண்டு போகக்கூடும். மேலும், வெளிப்புற மாசுபாட்டிற்கு ஆளாகிறது.

இது தவிர, ஒவ்வாமை மற்றும் தடிப்புகள் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடலாம். எனவே தான், பெற்றோர்கள் பலர் குழந்தைகளுக்கு சிறப்பு தோல் பராமரிப்பு வழக்கம் தேவையில்லை என்றும், தண்ணீரில் குளிப்பது போதுமானது என்றும் கருதுகின்றனர். உண்மையில், பிறந்த குழந்தைகளுக்கு சரும பராமரிப்பு தேவையா? இது குறித்த தகவல்களை டெல்லியில் உள்ள சரின் ஸ்கின் கிளினிக்கில் உள்ள தோல் மருத்துவரான டாக்டர் அங்கூர் சாரினி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

குழந்தைகளுக்கு தோல் பராமரிப்பு வழக்கம் தேவையா?

சரின் ஸ்கின் கிளினிக்கின் தோல் மருத்துவரான டாக்டர் அங்கூர் சரின் அவர்களின் கூற்றுப்படி, "குழந்தைகளின் தோல் பெரியவர்களின் தோலை விட மெல்லியதாகவும், துளைகள் நிறைந்ததாகவும் இருக்கும். மேலும் ஈரப்பதத்தை வேகமாக இழக்கிறது. இதன் பாதுகாப்புத் தடை இன்னும் முழுமையாக உருவாகவில்லை, எனவே குழந்தையின் சருமப் பாதுகாப்பிற்கு சுத்தப்படுத்துதல் மற்றும் ஈரப்பதமாக்குதல் மிகவும் அவசியமாகும்" என்று கூறினார். இதில், குழந்தையின் சருமப் பராமரிப்பு பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.தோல் பராமரிப்பு வழக்கம் ஏன் மற்றும் அதை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்த விவரங்களைக் காணலாம்.

image

young-mother-with-newborn-baby-n-1742665277392.jpg

குழந்தையின் தோல் பராமரிப்பு வழக்கத்தில் என்னென்ன இருக்க வேண்டும்?

1. சுத்திகரிப்பு

முதலாவதாக சுத்திகரிப்பு முறை அடங்குகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் மற்றும் லேசான சுத்தப்படுத்தியைப் பயன்படுத்தி குளிக்க வைக்க வேண்டும். அதன் படி, தினசரி முழு உடலையும் சுத்தம் செய்வது அவசியமில்லை. ஆனால் டயபர் பகுதி மற்றும்முக சுத்திகரிப்பு அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Baby Skin Care: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பிற்கு இந்த  4 எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்யுங்கள்..!

2. ஈரப்பதமாக்குதல்

குளித்த உடனேயே குழந்தைக்கு லோஷன்அல்லது, லேசான எண்ணெய் மசாஜ் செய்யலாம். ஏனெனில், இது சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தைப் பூட்டி, வறட்சியைத் தடுக்க உதவுகிறது.

3. சூரிய பாதுகாப்பு

ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளை நேரடி சூரிய ஒளியில் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பெரிய குழந்தைகளுக்கு, மருத்துவரின் ஆலோசனையுடன் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.

4. டயபர் பராமரிப்பு

ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கும் ஒரு முறை டயப்பர்களை மாற்ற வேண்டும். மென்மையான துடைப்பான்கள் அல்லது வெதுவெதுப்பான நீரில் சருமத்தை சுத்தம் செய்யவும். மேலும், டயபர் போடும் இடத்தில் கிரீம் தடவலாம்.

5. மசாஜ்

ஈரப்பதமாக்குவதோடு, மென்மையான மசாஜ் செய்வது குழந்தையின் தசைகளை வலுப்படுத்துவதோடு, நல்ல தூக்கத்தையும் பெற உதவுகிறது.

இந்தியாவில், குழந்தைகள் பாரம்பரியமாக கடலை மாவு, மஞ்சள், தயிர் அல்லது ஸ்க்ரப் போன்றவற்றின் மூலம் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எனினும், ஒவ்வொரு குழந்தையின் சருமமும் இந்த பொருட்களுக்கு ஒத்துப் போகாது. ஏனெனில், கடலை மாவு மற்றும் மஞ்சள் பயன்படுத்துவதால் சில குழந்தைகளுக்கு வறட்சி அல்லது தடிப்புகளை ஏற்படலாம். இது குறித்து டாக்டர் அங்கூர் சரின் அவர்கள் கூறுகையில், "மிகச் சிறிய குழந்தைகளுக்கு வீட்டு வைத்தியம் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது" என்கிறார்.

image

how-to-calm-a-fussy-baby-main-1763315997871.jpg

முடிவுரை

குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது மற்றும் உணர்திறன் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அதன் இயற்கையான தடை முழுமையாக வளர்ச்சியடையாததால், அதற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. எனவே, தண்ணீரில் மட்டும் சுத்தம் செய்வது போதாது. லேசான கிளென்சர், மாய்ஸ்சரைசர் மற்றும் டயப்பர் பராமரிப்பு போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதுடன், சரியான சூரிய பாதுகாப்பு மற்றும் மசாஜ் செய்வதும் அவசியமாகக் கருதப்படுகிறது. மேலும், எளிமையான மற்றும் பாதுகாப்பான குழந்தை தோல் பராமரிப்பு வழக்கம் ஆரோக்கியமான சருமத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளிலிருந்தும் பாதுகாக்கிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தையின் சருமத்திற்கு கடலை மாவு தடவுவது நல்லதா? மருத்துவர் தரும் பதில் இதோ

Image Source: Freepik

Read Next

பிறந்த குழந்தைக்கு பசும்பால் கொடுப்பது நல்லதா? கொடுத்தா என்னாகும்? மருத்துவர் தரும் அறிவுரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 13, 2025 22:51 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content