கொசுக்கடியால் தூக்கம் வரலயா? இத செஞ்சிட்டு தூங்குங்க! ஒரு கொசு கூட நெருஞ்சி வராது

  • SHARE
  • FOLLOW
கொசுக்கடியால் தூக்கம் வரலயா? இத செஞ்சிட்டு தூங்குங்க! ஒரு கொசு கூட நெருஞ்சி வராது

19 ஆம் நூற்றாண்டில், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு, இன்றும் அதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இன்றளவும் கொசுக்களால் பரவும் நோய்கள் இன்னும் பரவி வருவதுடன், சிகிச்சையளிப்பது கடினமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவால் பலர் மரணமடைகின்றனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஆண்டுதோறும் மலேரியாவால் சுமார் 4,00,000 இறப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மலேரியாவைத் தவிர, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் கொசுக்களால் பரவக்கூடியதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Cold Home Remedies: சளியுடன் போராட்டமா.? வீட்டு வைத்தியம் இருக்க கவலை எதுக்கு.!

இரவில் கொசுக்கள் அதிகம் பரவுவது ஏன்?

பொதுவாக, கொசுக்கள் பரவுவதன் காரணமாக மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற பல்வேறு நோய்களின் தாக்கங்களும் அதிகரிக்கிறது. கொசு பரவுதலின் காரணமாக தினமும் இந்த நோய்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. இந்த சுகாதார தாக்கங்களிலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் கொசுக்கள் இரவில் அதிகமாகக் கடிப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், தூங்கும் போது கொசுக்களை அடிப்பது குறைவாகும். இதில் மக்கள் தூங்கும் போது உடலால் உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தை அவர்கள் உணர முடியும் என்பதால் கொசுக்கடி நிகழ்கிறது. மேலும், உறங்கும் போது, கொசுக்கள் விரும்பும் பல இரசாயனங்களை நம் உடல் உற்பத்தி செய்வதன் மூலம் இது நிகழ்கிறது.

இரவில் தூங்கும் போது கொசு கடிக்காமல் இருக்க உதவும் வழிகள்

இரவு நேரத்தில் உறங்கும் போது கொசு கடிக்காமல் இருக்க சில ஆரோக்கியமான வழிகளை மேற்கொள்ளலாம்.

முழு ஆடைகளை அணிவது

இரவில் தூங்கும் போது உடலில் சருமம் வெளியில் தெரியாதவாறு முழு உடலையும் மறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கைகள், மற்றும் கால்களை முழுமையாக மூடுவதன் மூலம் கொசு கடிப்பதைத் தடுக்க முடியும். எனவே இரவில் தூங்கும் போது முழு உடலையும் மறைக்குமாறு முழுமையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

கொசு வலைகள் பயன்பாடு

இரவில் உறங்கும் போது, கொசு வலைகளைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்த வழியாகும். இது பழங்கால வழக்கமாக இருப்பினும், கொசுக்களை விரட்ட சிறந்த தேர்வாக அமைகிறது. கொசு விரட்டி பயன்பாட்டில் ஒவ்வாமை பிரச்சனைகள் இருப்பின், கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொசு வலை பயன்பாடு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Tea for Headache: தலைவலிக்கு மாத்திரை எல்லாம் வேணாம்! இந்த ஒரு டீ குடிங்க போதும்

கொசு விரட்டி பயன்பாடு

கொசுக்களை விரட்டுவதற்கு இரவில் பாதுகாப்பான மற்றும் சான்றளிக்கப்பட்ட கொசு விரட்டியைப் பயன்படுத்தலாம். இதை வெளிப்புறத் தோலில் தடவுவதன் மூலம் கொசுக்களைத் தவிர்க்க முடியும். மேலும் காயம், வெட்டு அல்லது வீக்கமடைந்த தோல் போன்றவற்றில் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், கண்கள் அல்லது வாய்க்கு அருகில் இதைப் பயன்படுத்தக் கூடாது. இயற்கையான கொசு விரட்டிகளின் உதவியுடன் இரவில் கொசுக்களைத் தவிர்க்கலாம்.

காற்றின் வேகத்தை அதிகப்படுத்துதல்

தூங்கும் போது அறையில் மின்விசிறியைப் பயன்படுத்தும் போது, அது குறைவாக இருந்தால் கொசுக்கள் கடிப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, விசிறியின் வேகத்தை அதிகரிக்க அதிவேக மின்விசிறியைப் பயன்படுத்துவதன் மூலம் கொசுக்கடியிலிருந்து விடுபடலாம்.

இந்த வகை வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இரவில் ஏற்படும் கொசுக்கடி அபாயத்திலிருந்து விடுபட முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: World Mosquito Day: எந்த பக்கம் போனாலும் கொசு கடி.. உடம்பெல்லாம் தடிப்பு.. தவிர்க்க வழிதான் என்ன.?

Image Source: Freepik

Read Next

World Mosquito Day 2024: சருமத்தை கொசுவிலிருந்து பாதுகாக்க உதவும் கொசு விரட்டி! என்னென்ன தெரியுமா?

Disclaimer