விரைகள் ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதியாகும். இது விதைப்பையில் அமைந்துள்ளது. இதில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து, கட்டியை உண்டாக்கும் போது, விரைச்சிரைப் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாகும் விகிதம் அதிகமாக இருப்பதால், அது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. விரைச்சிரைப் புற்றுநோய், அதன் அறிகுறிகள் மற்றும் பரவும் தன்மை குறித்து, ஹெச்.சி.ஜி ஹாஸ்பிடல்ஸ் கேன்சர் சென்டரின் புற்றுநோயியல் இயக்குநர், மருத்துவர் சச்சின் திரிவேதி எங்களிடம் பகிர்ந்துள்ளார்.
புற்றுநோயின் பொதுத்தன்மை:
மற்ற புற்றுநோயுடன் ஒப்பிடுகையில், விரைச்சிரைப் புற்றுநோய் அறிய வகையாக காணப்படுகிறது என்றும், இது இளம் வயதினரிடையே அதிகம் ஏற்படுகிறது என்றும் மருத்துவர் திரிவேதி கூறினார்.

விரைச்சிரைப் புற்றுநோய் பொதுவானது அல்ல என்றும், அவை 250 ஆண்களில் ஒருவருக்கு, ஒரு கட்டத்தில் ஏற்படுகிறது என்றும் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி (ACS) கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டில், உலகளவில் 62 நாடுகளில் 15 முதல் 44 வயதுடைய ஆண்களுக்கு மிகவும் பொதுவாக விரைச்சிரைப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக, இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர் கூறியுள்ளது.
இறங்காத விரை, அசாதாரண விரை வளர்ச்சி மற்றும் மரபியல் ஆகியவை விரைச்சிரைப் புற்றுநோய் காரணமாக இருக்காலம் என்று கூறிய மருத்துவர், ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் உயிர் பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: Bladder Cancer: சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்
ஆரம்ப அறிகுறிகள்:
*விரைகளில் கட்டி
*விரைகளின் இருபுறமும் வீக்கம்
*இரு விரைகளிலும் கனம், உணர்வின்மை மற்றும் அசௌகரியம்
*இடுப்பு மற்றும் அடிவயிற்றில் லேசான வலி
*முதுகு வலி
நோய் பரவலை அறிவது எப்படி?
புற்றுநோய் பரவலை பல்வேறு சோதனைகள் மூலம் கண்டறியப்படலாம். அதாவது, CT ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இரத்த பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் பரவலை கண்டறிய முடியும். விரைச்சிரைப் புற்றுநோய் பரவக்கூடிய பொதுவான பகுதிகள் சிறுநீரகங்கள், மார்பு, இடுப்பு, எலும்புகள் மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள நிணநீர் முனைகள் ஆகும். சரியான நேரத்தில் விரைச்சிரைப் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை பெற்றால், 100 சதவீதம் நோயை குணப்படுத்த முடியும். இது குறித்து புற்றுநோயியல் நிபுணரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.
விரைச்சிரைப் புற்றுநோய் சிறிது மேம்பட்ட உடன் உங்கள் உடலில் சில அறிகுறிகள் ஏற்படும். அவை,
* தொடர் இருமல்
* இரத்தமாக துப்புதல்
* மூச்சு திணறல்
* மார்பகங்களின் வீக்கம்
* கழுத்தில் கட்டி அல்லது வீக்கம்
* கீழ்முதுகு வலி
விரைச்சிரைப் புற்றுநோய் ஒரு பொதுவான புற்றுநோய் அல்ல. மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சரியான நேரத்தில் நோயை அறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டால், உயிரிழப்பு அபாயத்தை தடுத்து, வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
Image Source: Freepik