விபூதி என்று நம்மால் பொதுவாக அழைக்கப்படும் திருநீறு கடவுளின் அருட்சின்னமாக கருதப்படுகிறது. கோயில்களில் வழங்கப்படும் திருநீறு ஆன்மிக ஒளியாக குறிப்பிடப்பட்டாலும், இதில் பல வகைகளும் பல நன்மைகளையும் கொண்டிருக்கிறது.
திருநீறு என்றால் வெள்ளை வண்ணத்தில் அனைத்து கோயில்களிலும் வழங்கப்படுகிறது என அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் நான்கு வகைகள் இருக்கிறது என உங்களுக்கு தெரியுமா? ஆம், திருநீறில் கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என நான்கு வகைகள் இருக்கிறது.
திருநீறு வகைகள் மற்றும் தயாரிக்கும் முறை
கன்று கொண்டிருக்கும் பசு சாணத்தை அக்னியில் எரித்து வரும் சாம்பலை கல்பத் திருநீறு என்றும், காடுகளில் இருக்கும் பசுக்களின் சாணத்தை எரிப்பது அணுகல்பம் என்றும் தொழுவங்களில் இருந்து எடுக்கப்படும் சாணத்தை எரித்து வருவதை உபகல்பம் என்றும் பொதுவாக கிடைக்கும் சாணத்தை எரித்து தயாரிக்கப்படுவது அகல்பம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பெரும்பாலான இடங்களில் உபகல்பத் திருநீறை தான் பயன்படுத்தப்படுகிறது.

உடலில் நெற்றி என்பது முக்கியமான அங்கமாக இருக்கிறது. நெற்றியில் திருநீறு இடுவது நமக்கு பாசிட்டிவ் எண்ணத்தை அதிகரிக்கும், அதோடு நெற்றியில் திருநீறு இட்டால் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். கோயில்களில் சென்று மனதார வழிப்பட்டு திருநீறு இட்டுக் கொண்டால் நமக்கு மனநிம்மதியும் பாசிட்டிவ் எண்ணமும் முழுமையாக ஏற்படும்.
திருநீறு விபூதி பூசுவதால் கிடைக்கும் நன்மைகள்
திருநீறு ஆன்மீக ரீதியாக கருதப்பட்டாலும் இதில் பல நன்மைகள் இருக்கிறது. சிவனின் அருளாசியாக கருதப்படும் திருநீறு சிவனின் ரூபமான அக்னியில் எரித்து உருவாக்கப்படுகிறது. சிவன் கோயில் இல்லாத ஊரும், திருநீறு இல்லாத நெற்றியும் வீண் என கூறப்படுவதுண்டு.
அதனால் எங்கு சென்றாலும் நெற்றியில் சிறிதளவு திலகம் இட்டுச் செல் என பெரியோர்கள் சொல்வார்கள். அதோடு நாடாளும் மன்னனாக இருந்தாலும் கடைசியில் சாம்பலாகத் தான் போக போகிறோம் என்ற தத்துவத்தை மனிதருக்கு விபூதி உணர்த்தும். வாழ்க்கையில் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் நேர்மாக வாழ இந்த தத்துவம் வழிவகுக்கும்.
நெற்றிப் பகுதி அதிக சக்தியை வெளிப்படுத்தும் பகுதியாகும். சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக உள்ளிழுக்கும் செயலையும் திருநீறு செய்வதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் ஆன்மீகத் தகவல் என்றாலும் முன்னோர்கள் எதையும் சாதாரணமாக நமக்கு விட்டுச் செல்லவில்லை. அனைத்திற்கும் காரியமும் காரணமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
Image Source: Social Media