$
பெரும்பாலும் 60 வயதைத் தாண்டிய தந்தைகள் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் உடல்நிலை குறித்து விழிப்புடன் இருப்பது அவர்களது மகன், மகள்களின் பொறுப்பு.
தந்தையை பேணி காப்பது பெறுமை அல்ல கடமை
'மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்' என்ற குறளுக்கு ஏற்ப வாழ்ந்துக் காட்டுவதோடு, அவரது வயது முதிர்ந்த காலத்தில் தங்கள் குழந்தையை போல் அவரை பேணி காப்பதும் ஆகும். பெரும்பாலும் 60 வயதான பின் வயது மூப்பின் காரணமாக பல்வேறு இன்னல்களை தந்தைகள் சந்திப்பது இயல்பு. அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை சாதனங்களை வீட்டில் எப்போதும் வைத்திருப்பது நல்லது. மருத்துவத்தை விட அவர்களை நீங்கள் கவனித்துக் கொள்ளும் விதத்தில் தான் மனம் வலிமை பெற்று வேகமாக குணமடைவார்கள்.
இதையும் படிங்க: பிள்ளைகளுக்கு உணவை சாப்பிட கற்றுக்கொடுப்பது எப்படி?
தந்தையை பேணி காப்பது எப்படி?
60 வயதான பின் ஒரு நபர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதில்லை. உங்கள் தந்தையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். தினசரி காலை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுடன் நீங்களும் பேசிக் கொண்டே செல்லுங்கள். இது அவர்களது மன வலிமையை அதிகப்படுத்தி உற்சாகமாக வைத்திருக்க உதவும். முடிந்தால் வீட்டில் ட்ரெட் மில் அல்லது சைக்கிளிங் மிஷின் வாங்கி வைத்து அவர்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கவும்.
நோயெதிப்பு மண்டலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்
வயதானவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும். தட்பவெப்பநிலை மாற்றத்தால் உடனுக்குடன் நோய்கள் தாக்கும் அபாயம் நேரும். இதற்கு ஆரோக்கியமான பொருட்களை அவர்களின் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அனைத்து காலத்திலும் அவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் அவசியம். இதன் மூலம், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருக்கும். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் நீங்கள் உங்கள் தந்தைக்கு வைட்டமின்-டி மற்றும் பிற சப்ளிமெண்ட்ஸ் கொடுக்கலாம்.

செரிமான அமைப்பை கவனித்துக் கொள்ளுங்கள்
60 வயதிற்குப் பின், ஒரு நபர் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு குறையும். கனமான உணவை உட்கொண்டால், அவரது உடல்நிலை மோசமடையக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் அத்தகைய உணவில் இருந்து விலக்கி வைப்பது உங்கள் பொறுப்பாகும். குறிப்பாக வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகளை கொடுக்க வேண்டாம். அதேபோல், மலச்சிக்கல் ஏற்படாமல் செய்யாமல் இருக்க, உங்கள் தந்தையின் உணவில் நார்ச்சத்து அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சுகாதாரத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உடலளவிலும் மனதளவிலும் ஒரே மாதிரியான தன்மைக் கொண்டவர்கள். அவர்களுக்கு நல்லது கெட்டது பற்றிய புரிதல் குறையும். பெரும்பாலும் இந்த வயதில், தந்தைகள் தங்கள் சுகாதாரத்தை கவனித்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக அவர்களின் உடல்நிலை மோசமடையக்கூடும். சாப்பிடுவதற்கு முன் ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவச் சொல்லுங்கள். தினமும் குளிக்க அறிவுறுத்துங்கள். இது தவிர, தினமும் குளித்த பிறகு உள்ளாடைகளை மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: சிறு பிள்ளைகளுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்னையைப் புறக்கணிக்க வேண்டாம்
மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
பொதுவாக, வயதானவர்களுக்கு ஏன் மன அழுத்தம் என்பது சுற்றுப்புற சூழலை வைத்து உருவாகும். இதன் முக்கிய காரணங்களில் ஒன்று, அவர்கள் குழந்தைகளை பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பது ஆகும். உங்கள் தந்தையின் ஒவ்வொரு தேவைக்கும் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணரச் செய்யுங்கள். அவர்கள் தேவையை புரிந்துக் கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே நிதி உதவி வழங்குங்கள். இது தவிர, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், உங்கள் தந்தையிடம் பேசுங்கள். இதன்மூலம் அவர்கள் மன அழுதத்தில் இருந்து விடுபடுவார்கள்.
image source: freepik