கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெளியில் செல்லவே பலருக்கு பயமாக இருக்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க சரும செல்களை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள கோடையில் எளிதில் கிடைக்கும் பழங்களை வைத்து ஃபேஸ்பேக் போடுவது நல்லது.
சுட்டெரிக்கும் வெயிலில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும் ஃபேஸ் பேக்குகள் குறித்து சோசியல் மீடியாக்களில் அழகு கலை நிபுணர்கள் வழங்கியுள்ள சிறந்த சம்மர் ஃபேஸ்பேக்குகள் இதோ உங்களுக்காக...
மாம்பழ ஃபேஸ்பேக்:
கோடையில் மாம்பழம் அதிகம் கிடைக்கும். இதனால் அதை வைத்து ஃபேஸ்பேக் போடலாம்.
தேவையானவை:
மாம்பழத்தின் கூழ் – 1 டேபிள் ஸ்பூன், 1 டேபிள் ஸ்பூன் COLD க்ரீம், 1 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால்.
1 டேபிள் ஸ்பூன், 1 டேபிள் ஸ்பூன் COLD க்ரீம், 1 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம், கால்களுக்கு தடவி, அரை நேரம் கழித்து, கழுவ வேண்டும். இதனால் கோடையில் சருமத்தின் நீர்ச்சத்தை தக்க வைக்கலாம்.
தர்பூசணி ஃபேஸ் பேக்:
தேவையானவை : தர்பூசணி, தயிர்
அரை கப் தர்பூசணி கூழ் உடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து முகம், கை கால்களில் தடவி , அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் வறண்ட சருமம் பளபளப்பாகும். உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கும்.
எலுமிச்சை ஃபேஸ் பேக் :
தேவையானவை: எலுமிச்சை சாறு, தேன்
2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சேர்த்து கலந்து, முகம்,கை,கால்களில் தேய்த்து, அரை மணி நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். இதை தினமும் தடவி வந்தால் வெயிலால் ஏற்பட்ட கருமையை நீக்கலாம்.
கிவி ஃபேஸ் பேக்:
தேவையானவை: கிவி, பாதாம் பால், தேன்
ஒரு கிண்ணத்தில் அரை கப் கிவி சாற்றினை எடுத்துக்கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பால், 1 டீ ஸ்பூன் தேன் கலந்து கை, கால், முகத்தில் தடவி அரை மணி நேரம் உலர வைக்க வேண்டும். குறிப்பாக இந்த ஃபேஸ் பேக் சென்சிடிவ் சருமத்திற்கு ஏற்றது. கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தை மிருதுவாக்கும். சரும பளபளப்புக்கு உதவி செய்யும்.
தயிர் ஃபேஸ் பேக்:
தேவையானவை : தயிர்
தயிர் சரும நிறத்தை அதிகரிக்க உதவும். கோடையில் தயிரை வாரத்திற்கு இரண்டு முறை கை, கால், முகத்திற்கு 20 நிமிடம் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சருமத்துளைகள் சுத்தமாகி சருமத்துளைகள் மேம்படும். இந்த ஃபேஸ்புக் வறண்ட சருமத்திற்கு அதிக பலனை தரும்.
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்:
தேவையானவை: வெள்ளரிக்காய், சர்க்கரை, தயிர், பால்
1 வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீ ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த பால் கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சிப்பெறும்.
அன்னாசி ஃபேஸ் பேக்:
தேவையானவை: அன்னாசி, பன்னீர்
ஒரு அன்னாசி பழத்துண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை முகம், கை, கால்களில் தடவி 30 நிமிடத்திற்கு பின் பன்னீர் கொண்டு துடைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்தி நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சரும எரிச்சல் தடுக்கப்படும்.