Expert

சரும பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த 8 விஷயங்கள் பற்றி தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
சரும பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த 8 விஷயங்கள் பற்றி தெரியுமா?

1. விஷத்தன்மையுள்ள செடிகள்: 

விஷத்தன்மையுள்ள செடிகளை தொடும் போதோ, கிள்ளும் போதோ அவை உருஷியோல் என்ற எண்ணெயை வெளியிடுகின்றன. இவை சருமத்தில் தடிப்பு, அரிப்பு, கொப்புளங்கள், எரிச்சல் ஏற்பட காரணமாக அமைகிறது. 

2. நிக்கல் அலர்ஜி: 

பார்க்க வெள்ளியைப் போல பளபளப்பாக இருக்கும் நிக்கல் என்ற உலோகத்தால் செய்யப்படும் நகைகள், பெல்ட், கண் கண்ணாடி பிரேம்கள், கிளிப்பு ஆகியவற்றை அணியும் போது தோலில் ஒவ்வாமை ஏற்படக்கூடும்.

3.ரப்பர்: 

பலூன்கள், கையுறைகள், ரப்பர், எலாஸ்டிக், ஆணுறைகள் போன்ற ரப்பரில் பொருட்கள் ரசாயனத்துடன் கலந்து உருவாக்கப்படுவதால் இவை சருமத்திற்கு சொறி, அரிப்பு, தடிப்பு, எரிச்சல் போன்ற உபாதைகளை தரக்கூடும். 

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Skin Care: மழைக்காலத்தில் பிசு பிசுப்பான சருமத்தை எவ்வாறு அகற்றுவது? டிப்ஸ் இதோ!

4. ஆடைகள்: 

ஆடைகளில் பயன்படுத்தப்படும் தரமற்ற சாயங்கள் மற்றும் சில வகை ரசாயனங்கள் தோலில் சரும பிரச்சனைகள் உருவாக காரணமாக அமைகின்றன. 

5.அழகு சாதன பொருட்கள்: 

ஷாம்பு, கண்டிஷனர், சன்ஸ்கிரீன், லோஷன் மற்றும் மாய்ஸ்சரைசர்களில் பயன்படுத்தப்படும் ப்ரோமோனிட்ரோப்ரோபேன், டயசோலிடினைல் யூரியா, ஐசோதியாசோலினோன், PABA மற்றும் குவாட்டர்னியம்-15 போன்ற ரசாயனங்கள் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியவை. இந்த பெயர்கள் நீங்கள் வாங்கும் பொருட்களில் குறிப்பிடப்பட்டிருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. 

6. வாசனை திரவியங்கள்: 

பர்ப்யூம், டியோடரண்டின்களில் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தும் சில வகை ரசாயனங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை ஆகும்.  

7. மருந்து பொருட்கள்: 

பூச்சி கடி, தீக்காயம், அரிப்பு, பல் வலி, காது வலி, இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவரின் அட்வைஸ் இன்றி மருந்துகடைகளில் மருந்து வாங்கும் சில மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். 

8. புற ஊதா கதிர்கள்: 

சூரியனின் புற ஊதாக்கதிர்கள் தோல் சிவந்து போதல், எரிச்சல், தடிப்பு, அரிப்பு போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளை தரக்கூடியது. எனவே வெப்பம் அதிகமாக இருக்கும் போது வெளியே செல்ல நேர்ந்தால், சன்ஸ்கீரின்கள் அல்லது முற்றிலும் கவர் செய்யப்பட்ட ஆடைகளை அணிவது நல்லது. 

இந்த பதிவும் உதவலாம்: வாக்ஸ் ஸ்ட்ரிப் பயன்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பானதா நிபுணர்கள் கூறுவது என்ன?

Image Source :Freepik

Read Next

Beetroot Skin Benefits: பளிச்சென்ற முகத்திற்கு பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!

Disclaimer

குறிச்சொற்கள்