மீண்டும் ஊரடங்கா?... மிரட்ட வரும் புது வைரஸ்... சீனாவின் கொரோனா வைரஸ் ஆய்வு மையத்தில் கண்டறிப்பட்டது...!

கொரோனா வைரஸ் தொற்றா; ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீண்டு வரக்கூடிய நிலையில சீனாவில் நடந்திருக்கக்கூடிய ஆய்வில் புது வைரஸ் ஒன்று ண்டறியப்பட்டிருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் எந்த பாதிப்பை ஏற்படுத்தியதோ அதே குணத்தோடு இருக்கிறது தான் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
  • SHARE
  • FOLLOW
மீண்டும் ஊரடங்கா?... மிரட்ட வரும் புது வைரஸ்... சீனாவின் கொரோனா வைரஸ் ஆய்வு மையத்தில் கண்டறிப்பட்டது...!


கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில சீனாவின் ஊகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உலக நாடுகளை உலுக்கியது. சீனாவில் தொடங்கி அனைத்து உலக நாடுகளிலும் பரவிய இந்த வைரஸ் பெரும் அளவுல உயிரிழப்பையும் ஏற்படுத்தியது மனித இனத்துக்கே பெரும் அச்சுறுத்தலா மாறிய இந்த வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் மருத்துவமனைகளை நாடி ஓடினாங்க. 14 நாட்கள் தனிமைப்படுத்தணும் அப்படிங்கிற பத்திய முறை பலரையும் உளவியல் ரீதியா பாதித்தது. இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளிலும் உயிரிழப்பு என்பது பல லட்சங்களையும் கடந்தது. தோராயம் உலக அளவில் கொரோனாவால் மாண்டவர்கள் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவங்க என புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய சக்திக்கு தடுப்பூசிகளை கண்டறிந்து பொதுமக்களுக்கு வழங்கின. அந்த வகையில இந்தியாவிலேயும் கோ வேக்சின், கோவி ஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அவை நாட்டு மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டது. ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டவங்களுக்கு பூஸ்டர் டோசும் போடப்பட்டது. இப்படி கொரோனா வைரஸ் உலகம் முழுக்க மனித உயிரிழப்பு மற்றும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளாக அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறோம். இந்த நிலையிலதான் சீனாவில் தற்போது புதிதா ஒரு வைரஸ் கண்டறியப்பட்டிருக்கு hk u5cov2 அப்படின்னு அழைக்கப்படக்கூடிய இந்த வைரஸ் கொரோனா வைரஸ் போன்ற தன்மையை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அதாவது கொரோனா வைரஸைப் போலவே இந்த வைரஸும் சுவாச மண்டலத்தை தாக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவாசமண்டலம் மற்றும் குடல் உறுப்புகளை பாதிக்கும் தன்மை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் [இசை] தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் மனிதர்கள் பரவுறதோடு தொற்றுத்தன்மையும் கொண்டிருக்கு ஊகான் யூனிவர்சிட்டி அண்ட் தி ஊகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் நடத்தி இருக்கக்கூடிய ஆய்வில் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டிருக்கக்கூடிய நிலையில், உலக நாடுகளிடையே இந்த செய்தி தீயாய் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் போன்ற காய்ச்சல், இருமல், தும்மல், வயிற்றுப்போக்கு போன்றவை அறிகுறியா இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கும் அளவுக்கு அபாயம் ஏற்படுமா? அப்படிங்கிற கேள்வியும் எழுந்திருக்கு. எனினும் மருத்துவர்கள் ஆய்வாளர்கள் தரப்பில் அந்த அளவுக்கு பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டாலும் உலக சுகாதார நிறுவனம் இதுல கவனம் செலுத்தி பாதிப்பின் தீவிரம் வைரஸின் தன்மை எதிர்கால பிரச்சனை குறித்து விரிவா ஆய்வு நடத்தி உலக நாடுகளுக்கு உறுதியான தகவலை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read Next

கோழிப்பண்ணையில் பரவும் மர்ம நோயால் மூன்றே நாள்களில் 2500 கோழிகள் இறப்பு! தெலுங்கானாவில் பரபரப்பு

Disclaimer

குறிச்சொற்கள்