சாப்பிட்டப் பிறகு வெறும் 2 நிமிடம் மட்டும் இதை செய்தாலே போதும்!

  • SHARE
  • FOLLOW
சாப்பிட்டப் பிறகு வெறும் 2 நிமிடம் மட்டும் இதை செய்தாலே போதும்!


சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டும். அயர்லாந்தின் லிமெரிக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், உணவு உண்ட பிறகு வெறும் 2 நிமிடங்கள் நடப்பது கூட இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவியாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இதை செய்யுங்கள்

ஆய்வுப்படி, உணவு உண்டவுடன் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் உணவு உண்ட பிறகு 2 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதோடு, டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.

இரண்டு குழுக்களாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு குழுவினர் வழக்கமாக 2 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே நடக்க வைக்கப்பட்டனர். அதேசமயம் மற்ற குழுவைச் சேர்ந்தவர்கள் 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடந்தனர். இந்த ஆய்வின் முடிவில் 2 நிமிடங்கள் மட்டுமே நடப்பவர்களின் இரத்த சர்க்கரை அளவு குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சாப்பிட்ட பின் நடப்பதால் இரத்த சர்க்கரை அளவு குறையும்

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உணவை சாப்பிட்ட பிறகு, வசதியான நிலையில் உட்காருவதற்கு பதிலாக, நீங்கள் குறைந்தப்பட்சம் நிற்கலாம் அல்லது நடக்கலாம். சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பதும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பாதிக்கிறது.

இதைச் செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை குறைகிறது அல்லது சாதாரணமாகிறது. எனவே, நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவு சாப்பிட்டு ஓய்வெடுப்பதற்குப் பதிலாக அல்லது படுத்துக் கொள்ளாமல், சிறிது நேரம் நடக்கவும்.

நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

நீரிழிவு நோய்க்கு மட்டுமல்ல, இதயம் தொடர்பான பிரச்சனைகள், ஆஸ்துமா, உடல் பருமன் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களிலும் நடைபயிற்சி பயனுள்ளதாக இருக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, நடைபயிற்சி இருதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

மேலும் படிக்க: சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?

இது உடல் செயல்பாடுகளை செயல்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்பை எளிதாக்குகிறது.

Pic Courtesy: FreePik

Read Next

Drinks for Diabetics:ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த 5 பானங்களை முயற்சித்து பாருங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்