தினமும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். இதில் இதய ஆரோக்கியத்திற்கு நீங்கள் பயிற்சி செய்யக்கூடிய சில யோகாசனங்கள் என்னென்ன என்பதைக் காணலாம்
புஜங்காசனம்
இந்த யோகாசனம் மன அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது
அதோ முக சுவாசனா
அதோ முக சுவாசனம் அல்லது கீழ்நோக்கிய நாய் போஸ் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது
சேது பந்தா சர்வாங்காசனம்
இந்த யோகாசனம் பிரிட்ஜ் போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோகாசனம் சுவாசத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
விருக்ஷாசனம்
மரத்தின் போஸ் என்றழைக்கப்படும் விருக்ஷாசனம், சகிப்புத்தன்மை, நரம்புத்தசை ஒருங்கிணைப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
உட்கடசனா
நாற்காலி போஸ் என்றழைக்கப்படும் உட்கடசனா இதய ஆரோக்கியத்திற்கு செய்யும் யோகாசனங்களில் ஒன்றாகும். இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
சக்ராசனம்
இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் மிகவும் கடினமான ஒன்றாகும். இது மார்பு தசைகளை நீட்டுவதுடன் முதுகுத் தண்டின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கவும், இதய செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது