பாகற்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மைகள் என்றாலும் குறிப்பிட்ட நபர்கள் இதை சாப்பிடுவது என்பது உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கசப்பான சுவை நிறைந்ததாக இருந்தாலும், பாகற்காய் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுவது இல்லை.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் பாகற்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சிலர் இது பால் சுரப்பை அதிகரிக்கும் என்று நம்பினாலும், இது முற்றிலும் உண்மை இல்லை.
உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பாகற்காய் பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.குறைந்த இரத்த சர்க்கரை அளவு உள்ள ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், பாகற்காய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகற்காய் நல்லதல்ல என்று கருதப்படுகிறது. இது சில இரசாயனங்களைக் கொண்டுள்ளது.