உணவை குறைவாக சாப்பிட்ட பின்பும் உடலில் கொழுப்பு சேர்ந்து தொப்பை அதிகரிக்க குறிப்பிட்ட காரணங்கள் உள்ளது, அதுகுறித்து பார்க்கலாம்.
வயிற்று கொழுப்பு குடல் கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இதைச் சமாளிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தொப்பை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் அறிவது முக்கியம்.
பதப்படுத்தப்பட்ட உணவை அதிக அளவில் உட்கொண்டால், தொப்பை கொழுப்பு அதிகரிக்கக்கூடும். கூடுதலாக, நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்வது தொப்பை கொழுப்பு அதிகரிக்கக்கூடும்.
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாவிட்டால், தொப்பை கொழுப்பு அதிகரிக்கக்கூடும். இது உடலுக்கு பல சிறிய மற்றும் பெரிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் என்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கும். இதன்மூலம் தொப்பை கொழுப்பு ஆபத்து பல மடங்கு அதிகரிக்கக்கூடும்.