தினமும் ஆரஞ்சு சாறு குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

By Gowthami Subramani
04 Aug 2025, 08:37 IST

தினந்தோறும் ஆரஞ்சு பழச்சாறு குடிப்பது உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது. இதில் தினமும் ஆரஞ்சு சாறு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்

இதய ஆரோக்கியத்திற்கு

ஆரஞ்சு சாற்றில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

நீரேற்றத்தை மேம்படுத்த

ஆரஞ்சு சாறு நீர்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். குறிப்பாக, உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது வெப்பமான சூழலில் நீரேற்றமாக இருக்க இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் தேர்வாக அமைகிறது

வீக்கத்தைக் குறைப்பதற்கு

ஆரஞ்சு சாற்றில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்

பார்வை ஆரோக்கியத்திற்கு

ஆரஞ்சு சாற்றில் உள்ள பீட்டா கரோட்டின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கண் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

ஆரஞ்சு சாற்றில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. மேலும் இது உடல் இரும்பை உறிஞ்ச உதவுவதுடன் சருமத்தை மேம்படுத்துகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

மனநிலை மேம்பாட்டிற்கு

இதன் இயற்கை சர்க்கரைகள் விரைவான ஆற்றல் ஊக்கத்தைத் தருகிறது. அதே சமயம், இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நல்ல மனநிலையை மேம்படுத்த உதவுகிறது