உடலில் அதிகரிக்கும் யூரிக் அளவின் காரணமாக மூட்டு வலி மட்டுமல்லாமல் சரும பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இதில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதன் காரணமாக சருமத்தில் ஏற்படும் மாற்றங்களைக் காணலாம்
சிவத்தல்
யூரிக் அமிலம் குவிவதால் சருமத்தில் வீக்கம் அதிகரிக்கும். இது சிவப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, பாதிக்கப்பட்ட மூட்டுகளைச் சுற்றி சருமம் சிவந்து போகும் நிலை உண்டாகும்
புண்கள்
சிகிச்சை அளிக்கப்படாத கீல்வாதத்தின் கடுமையான நிலையினால், சருமத்தில் டோஃபியின் மேல் தோல் உடைந்து, திறந்த அல்லது வலிமிகுந்த புண்களுக்கு வழிவகுக்குகிறது
சரும தடிப்புகள்
அதிக யூரிக் அமில அளவுகள் வீக்கத்தைத் தூண்டக்கூடியதாகும். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மூட்டுகளைச் சுற்றி சிவத்தல், அரிப்பு, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது
வடுக்கள்
அதிக யூரிக் அமில அளவுகளின் காரணமாக நாள்பட்ட அழற்சி ஏற்பட்டு, சருமத்தை சேதப்படுத்துகிறது. இதற்கு சிகிச்சையளிக்கப்படாத போது வடுக்கள் ஏற்படுகிறது
வலிமிகுந்த கட்டிகள்
அதிகப்படியான யூரிக் அமிலத்தால் சருமத்தின் கீழ் டோஃபி எனப்படும் கடினமான கட்டிகள் உருவாகின்றன. இவை பெரும்பாலும் மூட்டுகளைச் சுற்றி, அசௌகரியம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்