டீயில் பிஸ்கட் நனைத்து சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கா?

By Karthick M
31 Jul 2025, 18:46 IST

தேநீரில் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும், இந்த பழக்கம் உண்மையில் உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.

தேநீரில் காணப்படும் காஃபினும், பிஸ்கட்டில் உள்ள சர்க்கரையும் ஒன்றாகக் கலக்கும்போது, அவை முகத்தைப் பாதிக்கலாம்.

பிஸ்கட் மற்றும் தேநீரை ஒன்றாக உட்கொள்வது முகத்தில் பருக்கள், முன்கூட்டிய முக சுருக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

பிஸ்கட்களில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. பிஸ்கட்களை நீண்ட நேரம் உட்கொண்டால், அது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

சர்க்கரை இல்லாத, செரிமானத்தை மேம்படுத்தும், மாவு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பல பிஸ்கட்டுகள் சந்தையில் கிடைக்கின்றன, அவை ஆரோக்கியமானவை என்று கூறுகின்றன.