சில நேரங்களில் இதயத்துடிப்பு திடீரென்று வேகமாகவோ அல்லது சில நேரங்களில் மெதுவாகவோ ஆகலாம். இத்தகைய நிலையில் என்ன செய்வது என பார்க்கலாம்.
முதலில் இந்த பிரச்சனை உங்களுக்கு சில நாட்களாகவே இருக்கிறது என்றால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்த முடிவாகும்.
எந்தவொரு பெரிய உடல்நல அபாயங்களும் அதிகரிப்பதைத் தடுக்க, நாடித்துடிப்பை தொடர்ந்து சரிபார்ப்பது முக்கியம்.
ஒரு நாளைக்கு பல முறை தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதிக காஃபின் உட்கொள்வதால் இதயத்துடிப்பும் ஒழுங்கற்றதாகிவிடும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவையும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். எனவே உங்கள் மனதை ரிலாக்ஸாக வைத்திருங்கள்.