சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டா உடல் எடை குறையுமா?

By Gowthami Subramani
12 Dec 2023, 16:36 IST

சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருள்களில் ஒன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை வள்ளிக்கிழங்கிற்கும், உடல் எடை இழப்புக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

எடை இழப்புக்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள புரோட்டீன்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சி, பி6 மற்றும் போட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. எடை இழப்புக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் பல்வேறு வழிகளில் உதவுகின்றன

அதிக நார்ச்சத்துகள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிக அளவிலான நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பல்வேறு ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது

குறைந்த அளவு கொழுப்பு, கலோரிகள்

இதில் இயற்கையாகவே குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பு காணப்படுகிறது. எனினும், அதிகப்படியான கலோரிகள் நிறைந்த உணவை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது

குறைந்த சோடியம்

இனிப்பு உருளைக்கிழங்கில் சோடியம் குறைவாக இருப்பதால் இவை உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. இவை நீர் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது

எப்படி சாப்பிடலாம்?

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்தோ அல்லது சிப்ஸ் போலவோ தயாரித்து பயன்படுத்தலாம். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது

எவ்வளவு சாப்பிடலாம்?

சர்க்கரை வள்ளிக்கிழங்கை தினந்தோறும் பெண்கள் 700 மைக்ரோ கிராம் அளவிலும், ஆண்கள் 900 மைக்ரோ கிராம் அளவிலும் எடுத்துக் கொள்ளலாம்