சருமத்தைப் பளபளப்பாக வைக்க வெளியில் நாம் பயன்படுத்தும் பொருள்களைக் காட்டிலும், உடலின் உள்ளே என்ன உணவளிக்கொறோம் என்பதைப் பொறுத்தும் அமைவதாகும். இதில் சருமத்திற்கு இயற்கை பளபளப்பைத் தரக்கூடிய உள்ளே இருந்து உதவக்கூடிய சில ஆரோக்கியமான உணவுகளைக் காணலாம்
தக்காளி
தக்காளியில் லைகோபீன்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும், நிறத்தை பிரகாசமாக வைக்கவும் உதவுகிறது
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
இது பீட்டா கரோட்டின் நிறைந்ததாகும். இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு, செல் புதுப்பிப்பை ஊக்குவிக்கிறது. இவை சருமத்திற்கு ஆரோக்கியமான தொனியை அளிக்கிறது
அவகேடோ
வெண்ணெய் பழம் அல்லது அவகேடோ ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்ததாகும். இது சருமத்தை மென்மையாகவும், ஆழமாக ஈரப்பதமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதை சாலட்கள், ஸ்மூத்தி வகைகளில் சேர்த்து சாப்பிடலாம்
ஆம்லா
ஆம்லாவில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது. இது இரத்தத்தை சுத்திகரிக்கவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது சருமத்தை பிரகாசமாகவும் இளமையாகவும் வைத்திருக்கிறது
வால்நட்ஸ்
வால்நட்ஸ் ஆனது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் துத்தநாகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நட்ஸ் வகையாகும். இவை இரண்டுமே சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை பராமரிக்கவும், பளபளப்பை மங்கச் செய்யும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது