உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஈ மிகவும் முக்கியமாகும். இதில் வைட்டமின் ஈ ஏன் உடலுக்கு மிகவும் முக்கியம் என்பதற்கான காரணங்களைக் காணலாம்.
கண் ஆரோக்கியத்திற்கு
வைட்டமின் ஈ-யின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து விழித்திரையைப் பாதுகாக்க உதவுகிறது. இது கண்புரை அல்லது வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்கிறது
மூளை ஆரோக்கியத்திற்கு
அல்சைமர் நோயைத் தடுப்பதில் வைட்டமின் ஈ முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஈ உட்கொள்ளலின் மூலம் அல்சைமர் நோயின் முன்னேற்றத்தை தாமதப்படுத்துகிறது
அழற்சியைக் குறைக்க
வைட்டமின் ஈ-ல் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ளங்கள், ஒவ்வாமை அல்லது சொறி போன்றவற்றால் ஏற்படும் வீக்கத்தைத் தணிக்க உதவுகிறது
இரத்த உறைவைத் தடுக்க
இரத்த அணுக்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க வைட்டமின் ஈ உதவுகிறது. இவை இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு
வைட்டமின் ஈ குறைபாடு காரணமாக முன்கூட்டிய பிறப்பு மற்றும் கருச்சிதைவு போன்ற கர்ப்பம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். வைட்டமின் ஈ குறைபாட்டைத் தடுப்பதன் மூலம் இதை சரி செய்யலாம்