நீங்க படுத்ததும் தூங்கனுமா? அப்போ இதை செய்யுங்க!

By Devaki Jeganathan
15 Mar 2024, 13:57 IST

தூக்கமின்மை ஒரு பெரிய பிரச்சனை. குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே தூக்கமின்மை பிரச்சனை அதிகமாகி வருகிறது. இந்நிலையில், நல்ல தூக்கத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

தூக்கத்தின் நேரம்

ஒருவர் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டியது அவசியம். உடலுக்கு போதிய ஓய்வு வழங்கப்படவில்லை என்றால், பல நோய்களின் ஆபத்து ஏற்படும். எனவே, தாமதிக்காமல் உடலுக்கு சரியான ஓய்வு வழங்க வேண்டியது அவசியம்.

படுக்கையை காலியாக வைக்கவும்

நல்ல தூக்கம் வர, தூங்கும் போது படுக்கையில் தலையணை, ஷீட் தவிர வேறு எதையும் வைக்கக் கூடாது. இது தவிர, படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

ரிலாக்ஸ்

இரவில் தூங்குவதற்கு முன், உடலைத் தளர்த்தி, கால்களின் தசைகளை தளர்த்தவும். இந்த நேரத்தில் நீங்கள் படுக்கையில் இருக்கிறீர்கள் மற்றும் தூங்கப் போகிறீர்கள் என்பதை உங்கள் உடல் புரிந்து கொள்ள வேண்டும்.

வெந்நீர் குளியல்

தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நன்மை பயக்கும். வெந்நீரில் குளிப்பது உங்கள் உடலை ரிலாக்ஸ்டாக வைத்திருப்பதோடு கெட்ட எண்ணங்கள் வராது.

தொலைபேசியை தவிர்க்கவும்

இரவில் தூங்கும் முன் லேப்டாப் அல்லது போன் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது மனதை திசை திருப்புகிறது. இது தூக்கத்தை தடுக்கிறது.

தூங்கும் முன் தியானம்

இரவில் தூங்கும் முன் தியானம் செய்வதன் மூலம் நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். மேலும், இது உங்களை ஆரோக்கியமாக உணர வைக்கிறது.

அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்

இரவில் தூங்கும் முன் கனமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவு உணவை ஜீரணிப்பது மிகவும் கடினம், இதன் காரணமாக நீங்கள் தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.