குளிர்காலத்தில் இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு இந்த ஒரு இலை தான்.!

By Gowthami Subramani
07 Dec 2023, 19:23 IST

குளிர்காலத்தில் உலந்த புதினா இலைகளை உட்கொள்வதன் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

உலர்ந்த புதினாவில் அதிகளவிலான வைட்டமின் சி, டி, ஈ, ஏ போன்ற வைட்டமின்களும், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை இருப்பதால் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்

வயிற்று வலி நீங்க

உலர்ந்த புதினா இலைகள் வயிற்று வலிக்கு சிறந்த தீர்வாகும். இதற்கு இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகளே காரணமாகும்

ஒவ்வாமை பிரச்சனைக்கு

இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஒவ்வாமை பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது

மன அழுத்தத்தைக் குறைக்க

உலர்ந்த புதினா இலைகள் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். இதன் இலைகளில் உள்ள அடாப்டோஜென் பண்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

குமட்டலைத் தடுக்க

உலர்ந்த புதினா இலைகளை உட்கொள்வதன் மூலம் வயிற்றில் உள்ள நொதிகளை செயல்படுத்தலாம். இது குமட்டல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது

பாக்டீரியாக்களை எதிர்த்து

குளிர் காலநிலையில் மக்கள் அடிக்கடி பாதிக்கப்படும் சளி, இருமல் போன்றவை வைரஸ் நோய்களால் ஏற்படுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்த வைரஸ்களைத் தவிர்க்க உலர்ந்த புதினாவைத் தேர்ந்தெடுக்கலாம்

உலர்ந்த புதினாவை உட்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்