பச்சை கொண்டைக்கடலையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் பச்சைக் கொண்டைக்கடலை தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
செரிமான மேம்பாட்டிற்கு
பச்சை கொண்டைக்கடலை நார்ச்சத்து மிகுந்த மூலமாகும். இது மலச்சிக்கல்லைத் தடுப்பதன் மூலம் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. ஆரோக்கியமான குடல் செயல்பாட்டைஆதரிக்கிறது
எலும்பு ஆரோக்கியத்திற்கு
பச்சைக் கொண்டைக்கடலை மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன. இவை எலும்பு அடர்த்தியை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைகளைத் தடுக்கவும் இவை உதவுகிறது
உடல் எடை குறைய
இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச் சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இவை ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது
நோயெதிர்ப்புச் செயல்பாடு
கொண்டைக்கடலையில் தாவர அடிப்படையிலான புரதங்கள் நிறைந்துள்ளது. இவை சைவ உணவு உண்பவர்களுக்கும் சிறந்த தேர்வாக அமைகிறது. பச்சை கொண்டைக்கடலை உட்கொள்வது நோயெதிர்ப்புச் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
இதய ஆரோக்கியத்திற்கு
பச்சை கொன்டைக்கடலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சோர்வு நீங்க
இதில் உள்ள புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை நிலையான ஆற்றலைத் தருகிறது. இது சோர்வை நீக்குகிறது