காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இது உடலில் நார்ச்சத்துக்கள் மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்களைச் சேர்க்க ஒரு சுவையான வாய்ப்பாகும்
உடல் எடையிழப்பு
ஓட்மீலை காலை உணவு தானியமாகத் தேர்ந்தெடுப்பது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்ற மேம்பாட்டிற்கு உதவுகிறது
அதிக நார்ச்சத்துக்கள்
ஓட்மீலில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை உடலின் கொழுப்பை குறைக்கவும், இரத்த சர்க்கரையை உறுதிபடுத்துவது மற்றும் நீண்ட நேரம் முழுதாக உணர வைப்பது உள்ளிட்ட பல நன்மைகளைத் தருகிறது
இரத்த சர்க்கரையைக் குறைக்க
இதில் உள்ள அதிகளவிலான மக்னீசியம் சத்துக்கள் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பின் முறையான செயல்பாட்டிற்கு உதவுகிறது
இதய நோய்
ஓட்ஸ் முழு தானியங்களைப் போலவே தாவர லிக்னான்களைக் கொண்டுள்ளது. இவை இதய நோய்களிலிருந்து பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது
செரிமான மேம்பாட்டிற்கு
ஓட்ஸ் ஒரு ப்ரீபயாடிக் உணவாகும், இதில் பீட்டா-குளுக்கன் ஃபைபர் உள்ளது, இது நல்ல குடல் பாக்டீரியாவுக்கு உணவளிப்பதுடன், குடல் இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவுகிறது
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த
ஓட்மீலின் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படும் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது
ஆற்றல் மேம்பாட்டிற்கு
ஓட்மீலில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, பொட்டாசியம், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை ஆற்றல் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது