ஓமம், பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
செரிமானத்தை மேம்படுத்தும்
ஓமம் தண்ணீர் செரிமான பண்புகளுக்கு பெயர்போனது. இது செரிமானத்திற்கு உதவுவதுடன், வீக்கம், அஜீரணம் மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளை நீக்கும்.
அமிலத்தன்மையை நீக்கும்
ஓமம் தண்ணீர் அமில எதிர்ப்பு பண்புகள், அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
வயிற்று பிரச்சனை
இயற்கையான ஆன்டாக்சிட் ஆக செயல்படும். அதிகப்படியான வயிற்று அமிலத்தால் ஏற்படும் அசௌகரியத்தை ஆற்றும்.
பசியைத் தூண்டும்
உணவுக்கு முன் ஓமம் தண்ணீரை குடிப்பது, உங்கள் பசியை தூண்ட உதவும். பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம்.
சுவாச ஆரோக்கியம்
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச நிலைகளைப் போக்க, ஓமம் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது சளியை அகற்ற உதவுகிறது.