குழந்தையின் வயதுக்கு ஏற்ப எத்தனை வேளை உணவளிக்க வேண்டும் தெரியுமா?

By Kanimozhi Pannerselvam
18 Jan 2024, 10:48 IST

பிறந்த குழந்தை

தாய் பால் அருந்தும் பிறந்த குழந்தையாக இருந்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒருமுறையும், 2 மாத குழந்தைக்கு 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறையும், 4-6 மாத குழந்தைக்கு 4 முதல் 5 மணி நேரத்திற்கு ஒருமுறையும் தாய் பால் புகட்ட வேண்டும்.

6-8 மாதங்கள்

குழந்தைக்கு தாய் பால் முதன்மை உணவாக இருந்தாலும், ஒருநாளைக்கு 1 அல்லது 2 முறை இரும்புச்சத்து நிறைந்த திட உணவு வழங்கலாம்.

9-12 மாதங்கள்

திட உணவு ஒரு நாளைக்கு 3 முறை மற்றும் சிற்றுண்டி. மெதுவாக திட உணவு முதல் இடத்தைப் பிடிக்கிறது, எனவே இரும்புச் சத்து, கலோரி அடர்த்தியான உணவு மற்றும் மெல்லும் திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பால் ஒரு நாளைக்கு 700-800 மில்லிக்கு மேல் இருக்கக்கூடாது.

12 மாதங்கள்

தினந்தோறும் 4 முறை திட உணவுகளை ஊட்டலாம். இது குழந்தையின் ஆற்றல் மற்றும் திறனை மேம்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

கூடுதல் உணவு

தாய் பால் அருந்தும் குழந்தையை விட புட்டி பால் அருந்தும் குழந்தைக்கு கூடுதலாக திட உணவுகளை வழங்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் சில சமயங்களில் புட்டிபால் குழந்தைக்கு போதுமானதாக இருக்காது.