ஆஹா.. வாய்ப்புண் டு தூக்கமின்மை; மருதாணியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

By Kanimozhi Pannerselvam
11 Apr 2025, 20:22 IST

வாய்ப்புண்

ஆறாத வாய்ப்புண் இருப்பவர்கள் இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளித்து வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்

உடல் வெப்பத்தை குறைக்க

மருதாணி இலைகளை அரைத்து கைகளில் அல்லது பாதங்களில் பூசுவதன் மூலம் உடல் வெப்பம் குறைகிறது. இது உடலின் குளிர்ச்சியை மேம்படுத்துகிறது .​

முடிவளர

இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி. விட்டு 100 கிராம் மருதாணி இலைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். இத்துடன் நறுமணத்திற்காக சந்தன தூள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்து தினமும் தலைக்கு தேய்த்தால் முடி காடு போல் வளரும்.

இளநரை நீங்க

மருதாணி இலைகளை வெந்தயம் மற்றும் புளியுடன் அரைத்து தலைமுடியில் பூசுவதன் மூலம் இளநரை குறைக்க முடியும். இது தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது

தூக்கமின்மை

மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.

கால் ஆணி

இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

பித்த வெடிப்பு

பாதங்களில் பித்த வெடிப்புகள் அல்லது புண்கள் ஏற்பட்டால், மருதாணி இலைகளை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவதன் மூலம் அவை குணமாகும்