"மாடல் பன்" வேண்டாம்:
முகத்திற்கு முன்னால் முடி விழுவதை தவிர்ப்பதற்காக மிகவும் இறுக்கமாக கூந்தலை இழுத்து குதிரை வால் போடும் பழக்கம் பொதுவானது. ஆனால் இப்படி இறுக்கமாக இழுத்து கட்டுவது முடி உதிர்வை அதிகரிக்கும் என்பதால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த ஹேர்ஸ்டைலை முயற்சிக்க வேண்டும்.
ரப்பர் பேண்ட் பயன்பாடு:
கூந்தலை எலாஸ்டிக் கொண்டு இறுக்கமாக கட்டுவதால் உருவாகும் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக முடியின் தண்டுகள் நடுவில் உடைந்து போகலாம். எனவே சேதத்தை குறைக்க பட்டு அல்லது சாடின் துணியால் ஆன ஸ்க்ர்ஞ்சிகளை பயன்படுத்தலாம்.
நீச்சல் குளம்:
நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் கலக்கப்படும் குளோரின் போன்றவை முடியை கடுமையாக சேதப்படுத்தக்கூடும். எனவே சுத்தமான நீராக இருந்தாலும் நீச்சல் குளத்திற்குள் இறங்கு முன்பு கூந்தலை தண்ணீர் படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
ஈரமான கூந்தலுடன் உறங்காதீர்கள்:
எக்காரணம் கொண்டும் ஈரமான கூந்தலுடன் உறங்கக்கூடாது. இது தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஈரமான கூந்தலானது மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதால், சேதத்தை தவிர்க்க அவ்வாறு உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
குளித்த உடனேயே முடியை உலர்த்துதல்:
குளித்த பிறகு ஈரமான தலைமுடி பலவீனமாக இருக்கும் என்பதால் உடனே அதை காய வைக்கக்கூடாது. குறிப்பாக ஹேர் டையர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது, டவலால் அழுத்தமாக துடைப்பது போன்றவற்றை கட்டாயம் செய்யக்கூடாது.
ஸ்டைலிங் சாதனங்கள்:
சிகை அலங்காரத்திற்காக ரசாயனம் கலந்த ஸ்டைலிங் சாதனங்களை அதிக நாட்களுக்கு பயன்படுத்துவதும் கூந்தலை மோசமான அளவில் சேதப்படுத்தும்.
ஈரமான முடியில் சீப்பு போடக்கூடாது:
ஈரமான கூந்தலை சீவுவதற்கு முன்னதாக நன்கு உலரவிட வேண்டும். அதேபோல் முடியை எப்போதும் நெருக்கமான பல் வரிசைகளைக் கொண்ட சீப்பிற்கு பதிலாக, இடைவெளி அதிகமான சீப்பைக் கொண்டு சீவ வேண்டும். அதேபோல் ஒவ்வொருமுறை தலை குளிக்கும் போதும், கன்டிஷ்னர் பயன்படுத்துவதை மறக்கக்கூடாது.
Image Soyrce: Freepik