ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் தெரிஞ்சுக்கனும்! மனித வாழ்க்கையும் 7 தடுப்பூசிகளும்!

தடுப்பூசி என்ற உடன் குழந்தைகளுக்கு மட்டும்தான் என அனைவரும் நினைக்கிறோம். ஆனால் பெரியவர்களுக்கும் கட்டாயம் செலுத்த வேண்டிய சில தடுப்பூசிகள் உள்ளன. அத்தகைய 7 தடுப்பூசிகள் குறித்து பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் தெரிஞ்சுக்கனும்! மனித வாழ்க்கையும் 7 தடுப்பூசிகளும்!

நம்மில் பெரும்பாலானோர் தடுப்பூசிகள் என்ற உடன் அது குழந்தைகளுக்கு மட்டுமே என்று தவறாக எண்ணுகிறோம். ஆனால் பெரியவர்களுக்கு தடுப்பூசி போடுவதும் அதே அளவு முக்கியமானது. வயது அதிகரிக்கும் போது நம் உடலில் சேர்த்து வைத்த நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது. இதனால் பல நோய்களுக்கு பலர் ஆளாக நேரிடுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பெரியவர்களை கடுமையான உடல்நல அபாயங்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன.

இதுகுறித்து, டாக்டர் சுசிஷ்மிதா ராஜமான்யா, முன்னணி ஆலோசகர் & தலைவர், உள் மருத்துவம், ஆஸ்டர் வைட்ஃபீல்ட் மருத்துவமனை, பெங்களூரு கூறிய தகவலை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: சர்க்கரை நோயை வரும் முன்பே தடுக்க... இந்த 3 விஷயங்கள உங்க அன்றாட உணவுல சேர்த்துக்கோங்க...!

கவனத்தில் வைத்திருக்க வேண்டிய 7 அத்தியாவசிய தடுப்பூசிகள்

1. இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) தடுப்பூசி - வருடாந்திர சுகாதாரக் கவசம்

காய்ச்சல் என்பது ஒரு பருவகால நோய் மட்டுமல்ல, இது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் நோயும் கூட என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நிலைமைகள் உள்ளவர்களுக்கு. காய்ச்சல் வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் மாறுவதால், அனைவருக்கும் வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசி அவசியம். பாதுகாப்பாக இருக்கவும் தொற்று பரவலைக் குறைக்கவும் இது ஒரு எளிய பயனுள்ள வழியாகும்.

thadupoosi-nanmaigal

2. நிமோகாக்கல் தடுப்பூசி - 65 வயதிற்குப் பிறகான நுரையீரல் பாதுகாப்பு தடுப்பூசி

  • நிமோனியா மற்றும் தொடர்புடைய தொற்றுகள் வயதானவர்களுக்கும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆபத்தானவை.
  • நிமோகாக்கல் தடுப்பூசி 65 வயதிற்குப் பிறகு செலுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.
  • இந்த தடுப்பூசியானது பெரும்பாலும் முழு பாதுகாப்பிற்காக இரண்டு அளவுகளில் வழங்கப்படுகிறது.

இது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவையையும், மோசமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளையும் தடுக்க உதவுகிறது.

3. ஹெபடைடிஸ் பி தடுப்பூசி - கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்

ஹெபடைடிஸ் பி நாள்பட்ட கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். நீங்கள் குழந்தையாக இருந்தபோது தடுப்பூசி போடப்படாவிட்டால், இந்த தடுப்பூசி மிக கட்டாயமாகும். குறிப்பாக நீங்கள் சுகாதாரத் துறையில் பணிபுரிந்தால் இந்த தடுப்பூசி மிக மிக அவசியமாகும். இது உங்கள் கல்லீரலையும் நீண்டகால ஆரோக்கியத்தையும் பாதுகாக்க ஒரு பாதுகாப்பான, நம்பகமான வழியாகும்.

4. HPV தடுப்பூசி - 45 வயது வரை உள்ள நபர்களுக்கான புற்றுநோய் தடுப்பு கவசம்

HPV என்பது கர்ப்பப்பை வாய் மட்டுமல்ல, பல புற்றுநோய்களுடன் தொடர்புடைய கவசமாகும். இந்த தடுப்பூசி 12 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இது சில புற்றுநோய்கள் மற்றும் பிறப்புறுப்பு மருக்கள் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு தடுப்பு கவசமாகும், இது குறுகிய கால அளவுகளுடன் நீண்டகால பாதுகாப்பை வழங்குகிறது.

human-life-and-vaccination

5. ஷிங்கிள்ஸ் தடுப்பூசி - 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு

உங்களுக்கு சின்னம்மை வந்திருந்தால், இந்த வைரஸ் பிற்காலத்தில் ஷிங்கிள்ஸ் ஆக மீண்டும் செயல்படக்கூடும். இது ஒரு வலிமிகுந்த மற்றும் சில நேரங்களில் நீண்டகால நிலை ஆகவும் கருதப்படுகிறது. 60 வயதிற்குப் பிறகு இரண்டு அளவுகளில் கொடுக்கப்படும் ஷிங்கிள்ஸ் தடுப்பூசி, இதைத் தடுக்க உதவுகிறது மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய நரம்பு வலியின் அபாயத்தைக் குறைக்கிறது.

6. டைபாய்டு தடுப்பூசி - வெளிப்புறத்தில் சுற்றி அலைபவர்களுக்கு முக்கியம்

  • இந்த காலக்கட்டத்தில் பயணம் என்பது நமது மன அழுத்தத்தை குறைக்க உதவும் வைத்தியமாக இருக்கிறது.
  • இதனால் பலரும் பயணம் செய்ய விரும்புகிறார்கள்.
  • அத்தகைய நபர்களுக்கு இந்த தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • டைபாய்டு தடுப்பூசி மாசுபட்ட உணவு அல்லது தண்ணீரால் ஏற்படும் கடுமையான நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
  • அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

7. வெரிசெல்லா தடுப்பூசி - குழந்தை பருவத்தில் தவறவிட்டவர்களுக்கு

  1. உங்களுக்கு சின்னம்மை இருந்ததில்லை என்றால் கவனமாக இருக்க வேண்டும். காரணம், வாழ்நாளில் இது ஒருமுறையாவது வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
  2. நோய் மிகவும் கடுமையானதாக இருக்கக்கூடும்.
  3. எனவே தடுப்பூசி போடப்படாத பெரியவர்களுக்கு, குறிப்பாக ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு வெரிசெல்லா தடுப்பூசி நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது.

தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் கவசமாகும். வயது, சுகாதார நிலைமைகள் மற்றும் வாழ்க்கை முறை பொறுத்து உங்களுக்கு அனைத்து நிலையிலும் தடுப்பூசிகள் தேவைப்படலாம். தனிப்பயனாக்கப்பட்ட, அதாவது தங்களுக்கு ஒரு திட்டம் தீட்டி ஒரு தடுப்பூசி வழக்க முறையை உருவாக்குவது குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். இது உங்கள் ஒட்டுமொத்த வாழ்நாள் ஆரோக்கியத்திற்கும் மிக மிக முக்கியமான விஷயமாகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

image source: freepik

Read Next

Badam Pisin Benefits: உயர் இரத்த அழுத்த நோயாளிகள் பாதாம் பிசின் சாப்பிடுவது நல்லதா? அதன் நன்மை தீமைகள் இங்கே!

Disclaimer

குறிச்சொற்கள்