Is Blood Cancer a Genetic Disease: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடல் பருமன், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய் அபாயம் ஏற்படலாம். குறிப்பாக, உலகம் முழுவதும் புற்றுநோய் வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஆண்டுதோறும் 1 கோடி பேர் புற்றுநோயால் மரணமடைகின்றனர். இதில் 2018 வரையே, இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மட்டுமே புற்றுநோய் போன்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது இரத்த புற்றுநோய்க்கான வழக்குகள் குழந்தைகளிடமும் அதிகம் காணப்படுகிறது. அதிலும் புற்றுநோய் இறப்புகளில் பெரும்பகுதிக்குக் காரணமாக இரத்தப் புற்றுநோய் அமைகிறது. WHO-ன் கூற்றுப்படி, இரத்த புற்றுநோய் என்பது ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகளைக் கண்டறிய வேண்டிய ஒரு நோயாகும். இந்த அதிகரித்து வரும் இரத்தப் புற்றுநோய்களுக்கு மத்தியில், இது ஒரு மரபிய சார்ந்த நோயா? என்ற குழப்பமும் எழுந்துள்ளது. அதாவது ஒருவரின் தந்தை அல்லது தாய்க்கு இரத்தப் புற்றுநோய் இருந்தால், அதன் தாக்கம் குழந்தைகளிலும் காணப்படுமா? என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: Blood Cancer Awareness Month: இரத்த புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன? இதனை எப்படி கண்டறிவது?
இரத்த புற்றுநோய் மரபியல் நோயா?
இது குறித்து டெல்லியில் உள்ள பிஎல்கே மேக்ஸ் மருத்துவமனையின் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் இணை இயக்குநர் டாக்டர் பவன் குமார் சிங் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரது கூற்றுப்படி, “புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளது. இதில் பல புற்றுநோய்கள் மரபணு சார்ந்தவையாகக் கருதப்படுகிறது. அதாவது பெற்றோருக்குப் புற்றுநோய் இருப்பின், அது குழந்தைகளுக்கும் வரலாம். எனினும், இரத்த புற்றுநோய் மரபணு சார்ந்தது அல்லது. அதாவது குடும்பத்தில் ஒருவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், அது தலைமுறையாக தொடர வேண்டும் அல்லது குழந்தைகளுக்கும் அது வர வேண்டும் என்றோ அவசியமில்லை. இரத்தப் புற்றுநோய் யாருக்கும் வரக்கூடிய நோயாகும்” எனக் கூறினார்.
மேலும் அவர், “ஒருவருக்கு இரத்தப் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைவது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் இல்லாததே ஆகும். மருத்துவரின் கூற்றுப்படி, ஒருவரது உடலில் இரத்த வெள்ளை மற்றும் சிவப்பணு இரண்டு செல்களும் குறைந்தால், அது ரத்த புற்றுநோயை உண்டாக்கலாம்” என்று கூறினார். இதில் இரத்த புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் சிலவற்றைக் குறித்து காண்போம்.
இரத்த புற்றுநோய்க்கான அறிகுறிகள் (Blood Cancer Symptoms)
- பலவீனமான உணர்வு
- சோர்வு
- மஞ்சள் நிற தோல்
- தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி
- திடீர் எடையிழப்பு
- காயத்திலிருந்து இரத்தப்போக்கு
- உடலில் மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படுவது
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்: தோலில் இந்த அறிகுறிகள் தோன்றினால் லேசுல விடாதீங்க; இரத்த புற்றுநோயாக கூட இருக்கலாம்!
இரத்த புற்றுநோய்க்கான தடுப்பு முறைகள் (Blood Cancer Prevention)
இரத்த புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க சில நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
- ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது முக்கியமாகும். பல்வேறு நோய்களிலிருந்து விடுபட தினமும் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- அடுத்ததாக, இரத்த புற்றுநோயைத் தடுக்க ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல் அவசியமாகக் கருதப்படுகிறது. இதற்கு கரடுமுரடான தானியங்கள், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர, நார்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.
- குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே ரத்தப் புற்றுநோய் இருந்தால், மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
- புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் கூட இந்த கடுமையான நோய்கள் ஏற்படலாம். எனவே இது போன்ற விஷயங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது.

இவ்வாறு பல்வேறு தடுப்பு முறைகளைக் கையாள்வதன் மூலம் இரத்தப் புற்றுநோய் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Obesity and Cancer: மக்களே உஷார்.. ரொம்ப குண்டா இருப்பவர்களுக்கு ரத்த புற்றுநோய் வருமாம்!
Image Source: Freepik