$
How To Make Lemon Face Pack: எலுமிச்சையின் நன்மைகளைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. இதைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இது பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்.
உடலை மட்டுமின்றி சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் பண்புகள் எலுமிச்சையில் நிறைந்துள்ளது. இயற்கை பராமரிப்பு பொருட்களில் எலுமிச்சை எப்போதும் முதலிடத்தில் இருப்பதாக அழகு நிபுணர்கள் கூறுகின்றனர்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின்-சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வயது தொடர்பான சுருக்கங்கள், தழும்புகள் மற்றும் முகப்பருவை எதிர்த்துப் போராட உதவுகின்றன. சரும ஆரோக்கியத்திற்காக லெமன் ஃபேஸ் பேக் (Lemon Face Pack) எப்படி செய்வது என்பதை இங்கே காண்போம்.

லெமன் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு லெமன் தேன் ஃபேஸ் பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் தேனின் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும். மேலும் எலுமிச்சையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் தொற்று மற்றும் வெடிப்புகளை தடுக்கிறது. இந்த ஃபேஸ் பேக்கை உருவாக்க, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் போதும்.
லெமன் மற்றும் சர்க்கரை ஃபேஸ் மாஸ்க்
லெமன் சர்க்கரையால் செய்யப்பட்ட ஸ்க்ரப் ஃபேஸ் மாஸ்க் சருமத்தை சுத்தம் செய்யவும், இறந்த செல்களை அகற்றவும் நன்றாக வேலை செய்கிறது. இதனை அதிகமாக தேய்க்க வேண்டாம். ஸ்க்ரப் போல தோலில் கடினமாக தேய்த்தால் சிவந்து உலர்ந்து போகும். இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை தேவை.

லெமன் மற்றும் முட்டை ஃபேஸ் பேக்
முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சம்பழம் சேர்த்து செய்த ஃபேஸ் மாஸ்க்கை தடவினால் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பண்புகளின் உற்பத்தி குறையும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படும். குறிப்பாக முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் உள்ளவர்களுக்கு இந்த பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பேக்கிற்கு ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஒரு தேக்கரண்டி புதிய எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
Image Source: Freepik