சந்தையில் கிடைக்கும் மஞ்சளில் அதிக அளவில் கலப்படம் உள்ளதோடு, உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆரோக்கியத்திற்காக நாம் பயன்படுத்தும் மஞ்சள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எப்படி அறிவது? என பார்க்கலாம்…
மஞ்சள் கிழங்கை வாங்கி வந்து, வெயிலில் காயவைத்து, உரலில் இடித்து சலித்து மஞ்சள் தயாரித்த காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது. தற்போது கடைகளில் கிடைக்கக்கூடிய மஞ்சள் தூள் பாக்கெட்களை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இதனால் மார்க்கெட்டிலும் மஞ்சளின் தேவை அதிகரித்துவிட்டது, எனவே கடைக்காரர்கள் போலி மஞ்சளை விற்பனை செய்கிறார்கள்.
பால், உணவுப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களில் நிறைய கலப்படம் உள்ளது மற்றும் இந்த கலப்பட பொருட்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கிறது. உண்மையான மற்றும் கலப்பட மஞ்சளை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி இன்று பேசுவோம். ஆயுர்வேதம் முதல் நவீன அறிவியல் வரை, மஞ்சள் பல பண்புகள் நிறைந்ததாக கருதப்படுகிறது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல விதங்களில் நன்மைகள் கிடைக்கும்.
மஞ்சளின் நன்மைகள்:
குளிர்ச்சிக்காக மஞ்சள் பால் பயன்படுத்தப்படுகிறது அல்லது காயம் ஏற்பட்டால் மஞ்சள் பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கும் மஞ்சள் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் சந்தையில் கிடைக்கும் மஞ்சளைத்தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
சந்தையில் கிடைக்கும் மஞ்சளில் அதிக அளவில் கலப்படம் உள்ளதோடு, உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கிறது. விஷத்தன்மை வாய்ந்த இந்த ரசாயனங்களை சாப்பிடும்போது ரத்தச்சோகை, குறைப்பிரசவம், மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கலப்பட மஞ்சள் தூள் மற்றும் நல்ல மஞ்சள் தூளை பார்த்தவுடன் கண்டுபிடிப்பது கடினம். ஒரு சில எளிமையான சோதனைகள் மூலம் கலப்பட மஞ்சள் தூளை கண்டுபிடித்து விடலாம். எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
போலி மஞ்சளை எவ்வாறு கண்டறிவது?
- மஞ்சளில் கலப்படம் இருப்பதை தண்ணீரைக் கொண்டு எளிமையாக கண்டுபிடித்து விடலாம். கண்ணாடி டம்ளர் ஒன்றில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதனுடன் மஞ்சளை சேர்க்க வேண்டும். கலக்க வேண்டாம். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் அதனை மீண்டும் பார்க்கும்போது மஞ்சள் டம்ளரின் அடிப்பகுதியில் சேர்ந்திருந்து தண்ணீர் தெளிவாக இருந்தால், உங்கள் மஞ்சள் சுத்தமானது. கலங்களாகவோ அல்லது மஞ்சள் தண்ணீரின் மேல் மிதந்து கொண்டிருந்தாலோ அதில் கலப்படம் உள்ளது.
- உங்கள் உள்ளங்கையில் ஒரு சிட்டிகை மஞ்சளை வைத்து, மற்றொரு கையின் கட்டைவிரலால் 10-20 விநாடிகள் மசாஜ் செய்யவும். மஞ்சள் தூயதாக இருந்தால், அது உங்கள் கைகளில் மஞ்சள் புள்ளிகளை விட்டுவிடும்.
- மஞ்சள் தூள் மட்டுமல்லாது வேரிலும் கலப்படம் செய்யப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், மஞ்சள் வேரை எடுத்து தண்ணீரை ஊற்றி கழுவுங்கள். வேரின் நிறம் மாறினால், அந்த மஞ்சள் வேர் ரசாயனத்தால் மெருகூட்டப்பட்டிருக்கலாம், கலப்பட மஞ்சள் வேர் என்பதை உறுதி செய்யுங்கள். விருப்பப்பட்டால் நீங்கள் வாங்கிய கடைக்காரரிடமும் தெரியப்படுத்தலாம்.