வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த பழங்களில் ஒன்று. நார்ச்சத்து நிறைந்த பழமான இது, பெருங்குடல் புற்றுநோய், டைப் 2 நீரழிவு நோய் உள்ளிட்டவற்றை தடுக்கிறது. மேலும் கொழுப்பை குறைப்பது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, செரிமான பிரச்சனைகளை நீக்குவது என பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன.

ஆனால் வாழைப்பழத்தை சாப்பிடாமல் மசித்து மாஸ்காக பயன்படுத்துவதால் சருமம் மற்றும் முடிக்கான பராமரிப்பை பெற முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க் நன்மைகள்:
வாழைப்பழத்தில் உள்ள சிலிக்கா என்ற பொருள், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது சருமத்தை நீரேற்றமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும் இயற்கை புரதங்களில் ஒன்றாகும்.

இதையும் படிங்க: வெறும் 10 ரூபாய் போதும்… முகத்தை பளீச்சென மாற்ற வீட்டிலேயே சீரம் தயாரிக்கலாம்!
மேலும் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி, வைட்டமின் ஏ ஆகியவை சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
சுருக்கங்கள் மறைய:
வயதாகும் போது, தோலில் உள்ள கொலாஜனை இழப்பது இயற்கையானது. கொலாஜன் இழப்புகள் சருமத்தை இறுக்கமாக்கி, மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை அதிகரிக்கலாம்.
வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தும் போது, அதிலுள்ள சிலிக்கா கொலாஜனை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள்,கோடுகள் மறையும்.
பளபளப்பான சருமத்திற்கு:
வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. உங்கள் சருமத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்களைப் பயன்படுத்துவது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும். இதனால் உங்கள் சருமம் அதிக பளபளப்புடன் மிளிரும்.
முகப்பருவுக்கு:
பெப்பர் மின்ட் ஆயில் பென்சாயில் பெராக்சைடு அல்லது சாலிசிலிக் அமிலம் போன்ற பருக்களை எதிர்த்துப் போராடும் பொருட்கள் வாழைப்பழங்களில் இல்லை என்றாலும், அவை வைட்டமின் ஏ மூலம் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் முகப்பருவுக்கு உதவும் என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மேக்கப் இல்லாமல் இயற்கை அழகுடன் ஜொலிக்க… இந்த 5 விஷயங்கள் போதும்!
முகப்பரு தழும்புகளுக்கு:
வாழைப்பழங்கள் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உதவியுடன் தோலில் உள்ள ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்கலாம் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இது முகப்பரு வடுக்கள் மற்றும் சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளை அகற்றுகிறது.
சூரியனிடம் இருந்து பாதுகாக்க:
வாழைப்பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் சருமத்தில் ஊடுருவி சூரியனால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கும் இயற்கையான திறனை அதிகரிக்கின்றன. இதற்கு வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவற்றின் பங்கும் முக்கியமானது.
வறண்ட சருமத்திற்கு:
சிலர் வாழைப்பழங்கள் வறண்ட சருமத்திற்கு உதவும் என்று கூறுகின்றனர். இதற்கு வைட்டமின் பி-6 மற்றும் பொட்டாசியம் ஆகியவை உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Image Source: Freepik